என்னது நிக் ஆர்ட்ஸ் நிறுவன அஜித்தின் சொந்த நிறுவனமா?.. என்னப்பா புதுப் புரளியா இருக்கே!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். முதன்மை நடிகராக மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வலம் வந்து கொண்டிருக்கும் உன்னத நடிகர் தான் அஜித். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்.
எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என்றால் அவருள்ளே இருந்தே அந்த விடாமுயற்சி எண்ணம் தான். ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் ரசிகர்களின் ஆதரவால் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க முடிந்தது.
கிட்டத்தட்ட ஆசை படம் தான் அஜித்திற்கு பெரிய திருப்புமுனையாக இருந்த படம். தொடர்ந்து ஒரு சாக்லேட் பாயாக சார்மிங் பாயாக வலம் வந்தவர் பல ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அஜித்தின் வளர்ச்சிக்கு ஒரு பக்கம் உறுதுணையாக அமைந்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தான்.
இதையும் படிங்க : தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகை!.. மீண்டும் பார்க்க முடியுமா?.. அந்த செயலை செய்வார்களா இயக்குனர்கள்?..
இதன் காரணமாக ரசிகர்கள் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் அஜித்தின் சொந்த நிறுவனமா என்று கேட்டு வருகின்றனர். ஏனெனில் அஜித்தின் பெரும்பாலான படங்கள் இந்த நிறுவனத்தின் மூலமே வெளியிடப்பட்டன. மேலும் இந்த நிறுவனமும் பெரும்பாலும் அஜித்தின் படங்களை தான் தயாரித்துள்ளனர். அதன் பிறகு சிம்பு படங்களை தயாரித்துள்ளன.
ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன், ரெட், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு, போன்ற அஜித்தின் படங்கள் நிக் ஆர்ட்ஸ் மூலம் தயாரித்த படங்களாகும். மேலும் அவர்கள் தயாரித்த 14 படங்களில் 9 படங்கள் அஜித்தை வைத்து தான் தயாரித்திருக்கின்றனர். இதில் பெரும்பாலும் அஜித்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களும் அடங்கும்.
அந்த வகையில் ரசிகர்கள் இந்த கேள்வியை கேட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தை சக்கரவர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வெப்சீரிஸ் விலங்கு என்ற படமும் இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டன.இப்பொழுது தொடர்ந்து அஜித் போனிகபூர் தயாரிப்பில் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.