தல இறங்குனா சும்மாவா...? போனி கபூரின் கல்லா ரகசியத்தை மேடை ஏற்றிய கட்டப்பா நடிகர்...!

போனிகபூர் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் திரைக்கு வெளிவர காத்துக் கொண்டிருக்கும் படம் ’வீட்ல விஷேசம்’. இந்த படத்தில் நடிகை அபர்ணா முரளி, சத்யராஜ், ஊர்வசி போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். வருகிற 17 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தி படமான பதாய் ஹோ படத்தின் ரீமேக் தான் வீட்ல விஷேசம் என்ற இந்த படம். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் தயாரிப்பாளர் போனிகபூரை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கூறுகையில் போனிகபூரின் படங்கள் எல்லாம் வெற்றியடைவதற்கு காரணம் அவர் பெயர் தான் என்று கூறினார்.
’போனி’ என்ற வார்த்தையால் தான் படங்கள் எல்லாம் போனியாகின்றன என்றும் முதன் முதலில் யாரை வைச்சு படம் தயாரித்தார் என்று யோசித்தாலே தெரியும் அதிலிருந்தே அவர் படங்கள் எல்லாம் வரிசையாக போனி ஆகிக் கொண்டிருக்கின்றன என கூறினார். அவர் கூறியது அஜித்தை தான். முதன் முதலில் நேர்கொண்ட பார்வை மூலம் தான் தமிழில் படம் தயாரிக்க முன் வந்தார்.