எனக்கு அந்த 5 படங்கள் ஃபேவரைட்!.. அட அஜித்தோட அண்ணனே சொல்லிட்டாரே!…

அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித்குமார். பல வருடங்கள் சாக்லேட் பாயாக காதல் கதைகளில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னேறினார். விஜய் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த போது அஜித் அவருக்கு போட்டி நடிகராக மாறினார். இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவில் வளர்ந்தார்கள்.
துவக்கத்தில் சாக்லேட் பாயாக நடித்தாலும் போகப்போக ஆக்சன் ஹீரோவாக மாறினார் அஜித். பில்லா படம் அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது .மங்காத்தா படம் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நிரூபித்தது. அந்த படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.

அந்த படத்திற்கு பின்னரே அஜித்துக்கு அதிக ரசிகர்களும் உண்டானார்கள். மாஸ் கதைகளில் நடித்தாலும் உண்மையில் ஹீரோ இமேஜ் இல்லாத கதைகளில் நடிக்க வேண்டும். அதை தனது ரசிகர்களுக்கும் பழக்க வேண்டும் என்கிற எண்ணம் அஜித்துக்கு அதிகமாகவே உண்டு. அதனால்தான் விடாமுயற்சி படத்தில் நடித்தார்.
இப்போது குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இப்படம் அமைந்திருக்கிறது. அஜித் ரசிகர்கள் அஜித்தை எப்படி பார்க்க வேண்டும் என ஆசைப்படுவார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. முதல் நாளிலேயே இப்படம் உலகமெங்கும் 50 கோடி வசூலை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் 30.9 கோடி வசூலை பெற்றிருக்கிறது.
தனது சினிமா கெரியரில் எவ்வளவோ வெற்றி மற்றும் தோல்விகளை பார்த்துவிட்டார் அஜித். அஜித்தின் குடும்பத்தில் யாருமே சினிமாவில் இருந்தது இல்லை. அஜித்துக்கு அனூப் குமார், அனில் குமார் என இரண்டு சகோதரர்கள். அவர்கள் தொழில் செய்து வருகிறார்கள். இதில், அனில் குமார் மும்பையில் தொழில் செய்து வருகிறார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவரிடம் ‘உங்கள் சகோதரர் அஜித் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள் எவை?’ என்கிற கேள்விக்கு ‘அவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், நான் அதில் 20 படங்களை மட்டுமே பாத்திருப்பேன். அதில், வாலி, முகவரி, துணிவு, விடாமுயற்சி, நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் எனக்கு பிடிக்கும். இதில், விடாமுயற்சி படத்தை சிறப்பாக உருவாக்கியிருந்தார்கள்’ என பாராட்டியிருக்கிறார்.