அஜித்திடம் இருந்து கே.ஜி.எஃப் இயக்குனருக்கு பறந்த ஃபோன் கால்… ஒரு வேளை இருக்குமோ?

by Arun Prasad |
AK 62
X

AK 62

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.

AK 62

AK 62

கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக முடிக்கவில்லை என்ற காரணத்தால் லைகா நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அதே வேளையில் விஜய்யின் “லியோ” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால் ,அந்த படத்துடன் போட்டிப் போடுவதற்கு நிகரான ஒரு கதையம்சம் தேவை என்பதனாலும், விக்னேஷ் சிவன் சொன்ன ஸ்கிரிப்ட் “லியோ” திரைப்படத்துடன் போட்டிப்போடும் அளவுக்கான ஸ்கிரிப்ட் இல்லை என்ற காரணத்தினாலும்தான் அவரை “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து நீக்கியதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

காரணம் எதுவாகிலும் விக்னேஷ் சிவன் “ஏகே 62” திரைப்படத்தில் இருந்து விலகியது உண்மைதான் என பல பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து விஷ்ணு வர்தன் அஜித்துடன் கைக்கோர்க்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறப்படுகிறது.

Magizh Thirumeni

Magizh Thirumeni

மேலும் சமீப நாட்களாக “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் வலம் வருகிறது. இது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது வீடியோ ஒன்றில் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது அஜித் குமார் “கே.ஜி.எஃப்” இயக்குனரான பிரசாந்த் நீலுக்கு தொடர்புகொண்டு நாம் படம் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார். பிரசாந்த் நீல் அஜித்தின் தீவிர ரசிகராம். அஜித்தே தொடர்புகொண்டு “படம் பண்ணலாமா?” என்று கேட்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம்.

Prashanth Neel

Prashanth Neel

ஆனால் தற்போது பிரசாந்த் நீல் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை இயக்கவுள்ளாராம். ஒரு படத்தை முடிக்க எப்படியும் ஒன்றரை வருடங்கள் ஆகும், ஆதலால் இப்போது அவரால் அஜித்தை வைத்து படம் இயக்கமுடியாத சூழலில் இருக்கிறாராம்.

இதனை அஜித்திடம் கூறியிருக்கிறார் பிரசாந்த் நீல். அதற்கு அஜித்குமார், “சரி, நாம் சில வருடங்களுக்குப் பிறகு இதை பற்றி பேசலாம்” என்று கூறினாராம். ஒருவேளை “ஏகே 63” அல்லது “ஏகே 64” திரைப்படத்தில் அஜித், பிரசாந்த் நீலுடன் கைக்கோர்க்க வாய்ப்பிருக்கலாமோ!!

இதையும் படிங்க: டி.ராஜேந்தர் நடிகராவதற்கு காரணமாக இருந்த ரஜினிகாந்த்… இது என்னப்பா புது கதையா இருக்கு!!

Next Story