Vasul Raja MBBS: சரண் இயக்கத்தில் கமல் மற்றும் சினேகா லீடு ரோலில் நடித்து வெளியான படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ். பக்கா நகைச்சுவை கலந்த செண்டிமெண்ட் படமாக இந்தப் படம் அமைந்தது. பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் கவனிக்கப்பட வேண்டிய கேரக்டராக நடித்திருந்தார்.
அதுவரை பிரகாஷ்ராஜை வில்லனாகத்தான் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இந்தப் படத்தில் அவருக்குள்ளும் இருந்த அந்த ஹுயூமரை பார்க்க முடிந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டும் ஆனது. இந்தப் படத்தை பற்றி சமீபத்தில் சரண் ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் மீது வந்த கோபம்.. படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய இயக்குனர்.. அப்புறம் நடந்தது இதுதான்!..
அதாவது வசூல்ராஜா படம் எடுக்கும் போது மிகவும் பரபரப்பில்தான் இருந்தாராம் சரண். எல்லாம் சரி வருமா ? படம் எப்படி வரும் என்ற ஒரு பயத்திலேயே இருந்திருக்கிறார். மொத்தப் படத்தையும் எடுத்தப் பிறகு எடிட்டிங்கில் போட்டுப் பார்த்தால் இரண்டு பாகம் எடுக்கிற அளவுக்கு 5 மணி நேரம் படம் அமைந்திருந்ததாம்.
அதன் பிறகு முக்கியமான காட்சிகளை எல்லாம் வைத்துவிட்டு மீதமுள்ள காட்சிகளை வெட்டியிருக்கிறார்கள். டப்பிங்கில் எல்லாம் முடித்த கமல் படத்தை பார்க்கும் போது அந்த வசனம் இல்லையே. அது நன்றாக இருக்கும் என்று சொல்வாராம். அவர் சொன்ன பிறகு அதற்கேற்ற காட்சிகளையும் ஒட்ட வேண்டியிருந்ததாம்.
இதையும் படிங்க: அஜித் மாறுவேடத்தில் போய் பார்த்த படம்.. விழுந்து விழுந்து சிரிச்ச தல! என்ன படம் தெரியுமா?
இப்படி ஒரு பரபரப்பிலேயே இருக்க படத்தை பார்த்து சிரிப்பார்களா? மாட்டார்களா? என்ற ஐயமும் சரணுக்கு இருந்ததனால் முதன் முதலில் வசூல்ராஜா படத்தை அஜித் ஷாலினியிடம்தான் காட்டினாராம். அஜித் ஷாலினி இருவரும் பார்த்து படமுழுக்க வயிறு குலுங்க சிரித்தார்களாம். அதன் பிறகே சரணுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கிறது என.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…