அஜித்தை நடிக்க விடாம பண்றதே இவர்கள்தான்...! பகிரங்கமாக கூறிய மூத்த பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். இவரின் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். வருடம் வருடம் பண்டிகைகள் வருகிறதோ இல்லையோ தன்னுடைய தலைவனை படத்தின் மூலமாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கின்றது.
சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே ஹீரோ நம்ம அஜித் தான். ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருந்தாலும் எந்த ஒரு பந்தா ஆடம்பரம் இல்லாமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். வெளியுலகத்திற்கு தெரியாமல் பல நல்ல உதவிகளை செய்து வரும் ஒரு உன்னதமான நடிகர்.
இப்படி இருக்கையில் இந்த ரசிகர்களாலயே அவரின் நடிப்பிற்கு தடை ஏற்படுகிறது என வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார். அஜித்தின் பெரும்பாலான படங்கள் வெளி மாநிலங்களில் சூட் செய்யப்படுவதற்குக் காரணம் அஜித் ரசிகர்தான் என கூறுகிறார். ஏனெனில் சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் அஜித்தை பார்க்க ஏராளமானோர் கூடுவார்கள்.
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் போது அவரது வருகையறிந்து விமான நிலையத்தில் காத்துக் கிடப்போர் எத்தனை பேர். அதுவும் போக காருக்கு பின்னாடியே டூவீலரில் விடாமல் துரத்திய சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் அஜித்தின் படங்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் படமாக்கப் படுகிறது.