Connect with us
ajith

Cinema History

அஸ்வினுக்கு வாழ்க்கை கொடுத்த அஜித்… நல்லா கும்பிட்டுக்கப்பா!…

சில சீரியல்களில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. இயக்குனர்கள் என்னிடம் கதை கூறும்போது கதை பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதைதான்’ எனப்பேசியிருந்தார்.

இது கடும் சர்ச்சையானது. அவரை கிண்டலடித்து நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் வைரலானது. மேலும், Sleeping Star என அவருக்கு பட்டத்தையும் அவருக்கு கொடுத்துள்ளனர். அவரின் பேச்சால் அவர் நடித்த ‘என்ன சொல்லப்போகிறாய்’ படத்தின் வெளியீடே தள்ளிப்போனது. எனவே, கடந்த ஒரு மாதமாகவே வீட்டில் முடங்கி கிடந்தார் அஸ்வின்.

enna solla pogirai

அவர் மீது நெகட்டிவ் இமேஜ் படிந்துவிட்டதால் படத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஆனால், வலிமை திரைப்படம் மூலம் அவருக்கு வாழ்க்கை கிடைத்துள்ளது. ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த வலிமை படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிப்போயுள்ளது.

எனவே, பல சின்னப்படங்கள் பொங்கல் விடுமுறையை குறி வைத்துள்ளது. அதில், அஸ்வின் நடித்துள்ள ‘என்ன சொல்லப் போகிறாய்’ படமும் ஒன்று…

எப்படியோ அஜித் மூலம் அஸ்வின் வாழ்க்கை மாறவுள்ளது என்றும் கூறலாம்..

google news
Continue Reading

More in Cinema History

To Top