அந்த நடிகருக்காக ஃபைட் மாஸ்டரை வெளுத்து வாங்கிய அஜித்.! அப்டி என்ன சொல்லிட்டார்.?!

by Manikandan |
அந்த நடிகருக்காக ஃபைட் மாஸ்டரை வெளுத்து வாங்கிய அஜித்.! அப்டி என்ன சொல்லிட்டார்.?!
X

தமிழ் சினிமாவில் எப்போதும் அஜித்குமாருக்கு என்று ஒரு மரியாதை எப்போதுமே உண்டு. தனக்கு மனதில் பட்டத்தை பேசிவிடுவார். அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என நினைப்பவர், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்றால், உடனடியாக எடுத்து விடுவார்.

அதனால் தான் அவர் நடிப்ப்பையும் தாண்டி தற்போதும் சினிமாவில் நல்ல மனிதராக வலம் வருகிறார். அதே போல தான் பெரிய நடிகர், மற்றவர்கள் சின்ன நடிகர் என எந்த பாகுபாடும் பார்க்கமாட்டார். அனைவரும் சமம் எனும் மனப்பான்மை கொண்டவர்

இதற்க்கு உதாரணமாக அண்மையில் ஒரு சினிமா பிரபலம் கூறுகையில், ' நான் விமல் நடித்த காவல் எனும் திரைப்படத்தில் வேலை செய்து வந்தேன். அந்த படத்திற்கு சில்வா மாஸ்டர் சண்டை பயிற்சி எடுத்து வந்தார். அப்போது அஜித் சில்வா மாஸ்டருக்கு போன் செய்தார். உடனே சில்வா மாஸ்ட்டர், இது ஒரு சின்ன படம் என கூறிவிடுவார்.

இதையும் படியுங்களேன் - அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு.!? கே.ஜி.எப் இயக்குனர் பக்கம் வண்டிய திருப்பிய விஜய் ரசிகர்கள்.!

உடனே அஜித் அந்த பக்கம் கோபப்பட்டு விட்டாராம். படம் எடுக்கும் போது எதுவும் சின்ன படம் இல்லை. அதனை மக்கள் முடிவு செய்வார்கள். நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் எல்லாரும் சின்ன படம் செய்து தான் மேலே வந்துள்ளோம் என சில்வா மாஸ்டரை அஜித் திட்டித்தீர்த்துவிட்டாராம். சில்வா மாஸ்டர் அஜித்திடம் சாரி கேட்டு, கேட்டு பிறகு போனை வைத்துவிட்டாராம்.

இந்த சம்பவத்தை மேடையில் கூறி அஜித் எப்படிபட்ட மனிதர் என அனைவருக்கும் தெரியப்படுத்தினார். ஒரு சினிமா பிரபலம். அஜித்திற்கு எவ்வளவு பெரிய மனம் என்பதை எடுத்து கூறினார்.

Next Story