மறுபடியும் ’சிட்டிசன்’ படமா...? போடு போடு...ஷங்கரின் வலையில் விழுவாரா அஜித்....
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குனர்களில் சங்கர் முக்கியமானவர். ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், நண்பன், காதலன், அந்நியன், எந்திரன், ஐ போன்ற பிரம்மாண்ட படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் சங்கர. இப்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் போய்க் கொண்டிருக்கின்றது.
மேலும் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆர்சி 15 என்ற இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்த நிலையில் படத்திற்கான தலைப்புகளை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையில் இருக்கிறார். அந்த வகையில் அவர் சிட்டிசன், சர்காரோடு, விஸ்வம்பாரா போன்ற தலைப்புகளை குறிப்பிட்டுள்ளார்.
இந்த தலைப்புகளில் படக்குழுவினருக்கு சிட்டிசன் என்ற தலைப்பே பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனராம். ஏற்கெனவே 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிட்டிசன் என்ற படம் 7 வேடங்களில் அஜித் நடித்து கலக்கியிருப்பார். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் அஜித்தின் கெரியரில் சிட்டிசன் படம் மிகப்பெரிய சாதனைய ஏற்படுத்தியது.
அந்த வகையில் மீண்டும் சிட்டிசன் என்ற பெயரில் ராம்சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானால் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது என திரைவட்டாரங்கள் பேசி வருகின்றனர். சங்கர் என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை.