கூடவே இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா?.. இந்த விஷயம் அஜித்திற்கு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். அஜித்தின் வளர்ச்சி ஒரு அபார வளர்ச்சியாக தமிழ் சினிமாவில் பார்க்க முடிகிறது. இன்று ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அஜித் திகழ்கிறார். அவர் நடிக்கும் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியிலும் சரி தயாரிப்பாளர்கள் மத்தியிலும் சரி ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.
கதையை கருத்தில் கொள்கிறார்களோ இல்லையோ ஒரு நல்ல ஓப்பனிங் மற்றும் வசூல் ரீதியாக அஜித்தை மிகவும் நம்பும் அளவுக்கு அவரின் மாஸ் இருக்கின்றது.அவரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் பிரபல தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தான்.
அஜித்தின் மிக முக்கிய படங்களை தயாரித்ததில் அவரின் பங்கு இன்றியமையாதது. ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு, போன்ற அஜித்தின் மிக முக்கிய படங்களை தயாரித்தது நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தான். சக்கரவர்த்தியும் அஜித்தும் உடன்பிறவா சகோதரர்களாக தான் இருந்தார்களாம்.
அப்போதெல்லாம் அஜித்தின் பணத்தில் தான் சக்கரவர்த்தி படம் எடுக்கிறார் என்று சொல்வார்களாம். அந்த அளவுக்கு நெருக்கம் காட்டியிருக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே சக்கரவர்த்தி தன் சொந்த பணத்தில் தான் அத்தனை படங்களையும்
தயாரித்திருக்கிறார்.
இந்தளவுக்கு பாசம் வைத்திருந்தவர்களின் உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்தனர். அந்த விரிசல் இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியாமல் தான் இருக்கின்றது. இந்த நிலையில் சக்கரவர்த்தியின் தந்தை இரண்டு தினங்களுக்கு முன்புதான் இறந்தாராம்.
இதையும் படிங்க : அதிக மொக்க வாங்கிய விஜயின் படம்!.. கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!..
அது ஒரு பக்கம் இருக்க சக்கரவர்த்தி கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம். இந்த செய்தி பல பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த விஷயம் அஜித்திற்கு கட்டாயம் தெரியவேண்டும் என அஜித்திற்காகவே பகிர்கிறோம் என வலைப்பேச்சில் அந்தனனும் பிஸ்மியும் கூறினார்கள்.