அஜித்தின் திரையுலக நெருங்கிய நண்பன்...! தல-ய பத்தி எப்படி புட்டு புட்டு வைக்காருனு பாருங்க...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிற்காக நடிகர் மற்றும் இதர படக்குழு மொத்தமுமே பாங்காங் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை அடுத்து அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார் நடிகர் அஜித். இப்படி அஜித்தை பற்றி வெவ்வேறு அப்டேட்ஸ்கள் வராதா என ஏங்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில்.
மேலும் அவரை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ள ரசிகர்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்தார் நடிகரும் இயக்குனரும் வசனகர்த்தாவுமான ரமேஷ் கிருஷ்ணா. கிட்டத்தட்ட அஜித்துடன் சேர்ந்து 10 படங்களுக்கு மேல் நடித்திருப்பதாக கூறினார்.
இதையும் படிங்கள் : ரஜினியுடன் அந்த மாதிரியான சீன்…! கூச்சப்பட்ட நடிகை…! நடந்தத தெரிஞ்சா நம்ம தலைவரா இப்படினு யோசிப்பீங்க..!
அஜித் நடித்த தொடரும் திரைப்படத்தின் இயக்குனரே ரமேஷ் கிருஷ்ணா தான். அந்த படம் எடுத்துக் கொண்டு இருக்கும் போதே இயக்குனர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தாய் படத்தில் நடிக்க வரச் சொல்லி ரமேஷ் கிருஷ்ணாவுக்கு அழைப்பு மாறி மாறி வந்ததாம். இதை புரிந்து கொண்ட அஜித் நீங்கள் போய் அதை முடித்து விட்டு வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என கூறி கிட்டத்தட்ட 3 மணி நேரம் படப்பிடிப்பிலயே இருந்தாராம் அஜித். மேலும் இவருடன் அதிகமாக படம் நடித்ததால் என்னைத்தான் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்றே அழைத்தனர் என ரமேஷ் கூறினார்.