பாக்க போனது ஒரு குத்தமா....? சீரியல் நடிகையை மிரட்டிய நடிகர் அஜித்....!
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஜிதா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பெயர் சுஜிதா என்றாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ‘தனம்’ என்ற பெயராலயே அறியப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் இவரே நடித்திருந்தார். மேலும் இந்த தொடரில் மூத்த மருமகளாக நடித்திருக்கும் சுஜிதா பல விளம்பர படங்களையும் இயக்கி வந்தார். நடிகை ஹன்சிகாவை வைத்தும் விளம்பர படங்களை இயக்கியுள்ளார்.
பல படங்களில் சைடு ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தோழி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய படம் வாலி. இந்த படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்திருப்பார். அப்பொழுது அவர் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம்.
வாலி படப்பிடிப்பு எல்லாம் முடிந்து படத்தின் ப்ரிவியூக்காக எல்லாரும் பார்க்க சென்றுள்ளனர். சுஜிதாவும் உடன் சென்றுள்ளார். படத்தை பார்த்து வெளிவந்த அஜித் சுஜிதாவை பார்த்து நீ 10 ஆம் வகுப்பு தான படிக்கிற, முதல்ல ஒழுங்கா படினு சொன்னாராம். இது அவருக்கு நியாபகம் இருக்கானு தெரியல ஆனால் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, மேலும் அனைவரிடமும் அவரே வந்து எதார்த்தமாக பேசுவார் பழகுவார் என்று சுஜிதா கூறினார்.