இக்கட்டான நிலையில் இருந்த இயக்குனர்!.. குடும்ப செலவுகளை ஏற்றுக் கொண்ட அஜித்!.. வலிகளை தாண்டி தல-யின் அந்த எண்ணம்..
தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக இருக்கும் அஜித்தின் துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு துணிவு படம் ஒரு டிரீட்டாகவே அமைந்து விட்டது.அந்த அளவுக்கு அஜித் இந்த படத்தில் சற்று வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவருக்கான ரசிகர்களின் பலம் இவரை இன்னும் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது. பல வலிகளை கடந்து தன் விடாமுயற்சியால்இன்று ஒரு மாபெரும் உயரத்தை அடைந்திருக்கிறார் அஜித். இவரை பற்றி ஏராளமான விஷயங்கள் வெளிவராமல் இருக்கின்றது.அது சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமே கூறினால் தான் செய்தி வைரலாகிறது.
அந்த அளவுக்கு ஒரு கையில் செய்கிற உதவி மறு கைக்கு தெரியக்கூடாது என்ற எண்ணம் படைத்தவராக விளங்குகிறார் அஜித்.அந்த வகையில் இவரால் பலனடைந்த ஒரு திரைப்பட இயக்குனர் அஜித்தால் தனக்கு கிடைத்த உதவியை ஒர் பேட்டியில் கூறினார்.நாங்கள் புதியவர்கள், அதாண்டா இதாண்டா போன்ற படங்களை இயக்கியவர் தான் கூடலூர் கேஜி இளவழகன். அவர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் ஆப்ரேஷன் செய்து கொண்டாராம்.
இதையும் படிங்க : “நடிகர்கள் சம்பளத்தை முடிவு செய்றது யார்ன்னு தெரியுமா??”… கம்பீர பதிலால் தூக்கி அடித்த விஜயகாந்த்…
அவரும் ஷாலினியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்களாம் .மேலும் முதலில் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்த சிலபடங்களிலும் இளவழகன் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறாராம். மற்றபடி அஜித்திற்கு இவருக்கும் சம்பந்தமே இல்லையாம்.முதல் ஆப்ரேஷன் செய்து ஒருவருடம் வீட்டில் இருந்த இளவழகன் இரண்டாவதாக ஒரு ஆப்ரேஷன் செய்தால் தான் ஆபத்து இருக்காது என்று சொல்லிவிட்டார்களாம்.
இதை எப்படியோ அறிந்து கொண்ட அஜித் தன் மேக்கப் மேனை இளவழகன் வீட்டிற்கு அனுப்பி இவரை அழைத்து வரசொல்லியிருக்கிறார்.மேலும் ஆப்ரேஷனுக்கு தேவையான செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் மாதந்தோறும் வீட்டிற்கு 10000 ரூபாய் அனுப்புவதாகவும்கூறினாராம். ஆனால் அஜித்திற்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என நினைத்த அந்த இயக்குனர் அரசு மருத்துவமனையிலேயே ஆப்ரேஷன் செய்து கொண்டாராம்.