ரசிகர்கள் முட்டாளா? புரோமோஷனில் இறங்கினாலும் உங்க கெத்த விடமாட்றீங்களே அஜித் சார்…

by Akhilan |
ரசிகர்கள் முட்டாளா?  புரோமோஷனில் இறங்கினாலும் உங்க கெத்த விடமாட்றீங்களே அஜித் சார்…
X

Ajithkumar: நடிகர் அஜித்குமார் தற்போது தொடர்ச்சியாக தான் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடும் ஆர்வத்தில் இருக்கிறார். ஆனால் அவரின் வாய் தான் சும்மா தான் இருக்க மாட்டேன் என்கிறது. அப்படி வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பெரும்பாலும் புகழுக்காக ஏங்குபவர்கள். ஆனால் இதில் ரொம்பவே வித்தியாசமானவர் நடிகர் அஜித்குமார். ஒருகட்டத்தில் தன்னுடைய திரைப்படங்களின் புரோமோஷனுக்கே செல்வதை நிறுத்தினார். தன்னுடைய ரசிகர் மன்றங்களை மொத்தமாக கலைத்தார். இது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ரஜினிக்கு பயத்தை காட்டிய ராமராஜன்… ரகசியத்தை கசிய விட்ட கே.எஸ்.ரவிக்குமார்!..

முன்னணி நடிகரான அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் அவர் குறித்த அப்டேட் எதுவும் ரசிகர்களுக்கு கிடைக்காமலே இருந்தது. அவரின் ஒரு புகைப்படம் கிடைக்க கூட ஏங்கும் நிலை தான் இருந்தது. அப்படி ரிலீஸானால் கூட தெளிவில்லாத படமாகவே வெளிவந்தது.

ஆனால் இப்போதெல்லாம் ஆச்சரியப்படும் விதமாக அஜித் குறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வரிசையாக வெளியாகி வருகிறது. மோட்டர் பைக் கத்துக்கொடுக்கும் வீடியோ, பைக் ஓட்டும் வீடியோ, சமைக்கும் வீடியோ, லேட்டஸ்ட் புகைப்படங்கள் என விஜயை தாண்டி அஜித்தின் லேட்டஸ்ட் விஷயங்களே தற்போது அதிகமாக இணையத்தில் உலா வருகிறது.

இதையும் படிங்க: ஆறடி சந்தக்கட்ட போல உடம்பு!.. அழகை காட்டி இழுக்கும் மாஸ்டர் பட நடிகை மாளவிகா!…

சமீபத்தில் கூட அஜித் மற்றும் ஷாலினியின் லவ் அனிவர்சரி வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ் குவித்தது. அந்த வகையில் தற்போது ஒரு லேட்டஸ்ட் வீடியோ கசிந்து இருக்கிறது. ரசிகர்கள் கையெழுத்து வாங்கும் அந்த வீடியோவில் அஜித் ரசிகர்களை பார்த்து என்ன முட்டாள் தினத்தில் வந்து இருக்கீங்க என நக்கலாக சொல்கிறார். என்னங்க புரோமோஷனு இறங்கியாச்சு. அப்புறம் உங்க ரசிகர்களை நீங்களே இப்படி பேசலாமா எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.

அந்த வீடியோவைக்காண: https://twitter.com/iammoviebuff007/status/1775039931578302606

Next Story