போனி கபூரை லிஸ்ட்டில் இருந்து தூக்கிய அஜித்?… “இதுதான் கடைசி படம்!”… என்ன காரணம் தெரியுமா??
அஜித் குமார் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று விஜய் நடித்த “வாரிசு” திரைப்படத்துடன் மோத உள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் அஜித்-விஜய் திரைப்படங்கள் மோதுகின்றன. ஆதலால் ரசிகர்கள் இத்திரைப்படங்களுக்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.
“துணிவு” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அஜித்தை வைத்து “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். “துணிவு” திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத்துடன் இணைந்துள்ளார் அஜித்.
அதே போல் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு போனி கபூர் அஜித்தின் “துணிவு” திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில் போனி கபூருக்கும் அஜித்திற்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: “போதும் டா சாமி!”… வடிவேலுக்கு கும்பிடு போட்ட லைக்கா நிறுவனம்…
சில நாட்களுக்கு முன்பு போனி கபூர், அஜித்திற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் பாக்கி வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளிவந்தது. அதனை தொடர்ந்து அஜித் முழு சம்பளத்தையும் கொடுத்தால்தான் டப்பிங்கை முடித்துத்தருவேன் என கூறினாராம்.
எனினும் அஜித்குமாரை சமாதானப்படுத்தி டப்பிங் பேசவைத்துவிட்டார் போனி கபூர். ஆனால் அஜித், படத்தின் முதல் பாதி மட்டுமே டப்பிங் பேசியுள்ளாராம். முழு தொகையை கொடுத்த பிறகுதான் இரண்டாம் பாதிக்கான டப்பிங்கை பேசப்போவதாக முடிவெடுத்துள்ளாராம். மேலும் இது போன்ற மனஸ்தாபங்களை தொடர்ந்து இனி போனி கபூர் தயாரிக்கும் திரைப்படங்களில் அஜித் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவருகிறது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms