விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடிக்க வேண்டாம்- கண்டிஷன் போட்ட அஜித்! ஓ இது தான் பிரச்சனையா!!

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

ajith
இந்நிலையில் த்ரிஷா நடிக்க வேண்டாம் என அஜித் கூறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில் த்ரிஷா அடுத்தடுத்து படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
இதனால் அடுத்த மாதம் தொடங்கவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து படக்குழுவிடம் த்ரிஷா தெரிவித்துள்ளார். தற்றோது வேறு சில படங்களின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நாட்கள் அவகாசம் கொடுத்தால், அந்த படப்பிடிப்புகளை முடித்துவிட்டு வந்து நடிக்கிறேன் என கேட்டுள்ளார்.

Ajith
ஆனால் அஜித் ஏற்கனவே விடாமுயற்சி படபிடிப்பு தொடங்க மிகவும் தாமதம் ஆகிவிட்டது. எனவே, த்ரிஷாவுக்காக காத்திருக்காமல், அவரை மாற்றிவிட்டு தமன்னாவை ஹீரோயினாக போடுங்கள் என்று இயக்குநரிடம் அஜித் கூறிவிட்டார் என கூறப்படுகிறது.
சில ஆண்டுகளாக ஃபீல்டு அவுட்டாகி இருந்த தமன்னா, தற்போது காவாலா பாடலின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். எனவே த்ரிஷா பிசியாக இருப்பதால், ட்ரெண்டில் இருக்கும் தமன்னாவை ஹீரோயினாக போடுமாறு அஜித் தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க-சூட்டிங் வரமாட்டேன்! ஆனால் சம்பளம் மட்டும் 12 கோடி வேணும் – இதென்ன நியாயம்? அட்டூழியம் பண்ணும் நயன்