“விஜய்தான் வசூல் நாயகன்!! ஆனா இனிமே அப்படி கிடையாது”… ஃபேஸ் டூ ஃபேஸ் மோதிப்பார்க்கும் அஜித்…

Published on: January 1, 2023
Thunivu VS Varisu
---Advertisement---

விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் மோதவுள்ளதால், ரசிகர்கள் இத்திரைப்படத்திற்காக வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.

நேற்று “துணிவு” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்திருந்தது. ரசிகர்களிடையே திரைப்படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகளவில் உருவாக்கியிருக்கிறது “துணிவு” டிரைலர். இத்திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக தெரிய வருகிறது.

Thunivu
Thunivu

மேலும் “வாரிசு” திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. “துணிவு” திரைப்படத்தின் டிரைலர் அட்டகாசமாக இருந்ததால், “வாரிசு” திரைப்படத்தின் டிரைலருக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், விஜய்-அஜித் மோதல் குறித்த ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பருத்திவீரன் லாரியால் ஏற்பட்ட சர்ச்சை…. பிரபல அரசியல்வாதியை வம்புக்கு இழுக்கும் அமீர்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது..!!

Varisu VS Thunivu
Varisu VS Thunivu

அதாவது விஜய் வசூல் சக்ரவர்த்தி என்று புகழப்படுகிறார். இந்த பெயரை காலி செய்யவேண்டும் என அஜித் நினைத்தாராம். பல வருடங்களாக விஜய் சிங்கிளாகவே வந்து ஜெயித்து விடுகிறார். ஆதலால்தான் விஜய்யை வசூல் சக்ரவர்த்தி என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆதலால் இந்த முறை நேரடியாக இறங்கிப் பார்ப்போம் என அஜித் முடிவெடுத்துவிட்டாராம்.

இதனால்தான் “துணிவு” திரைப்படம், “வாரிசு” திரைப்படத்துடன் மோதுகிறதாம். மேலும் “துணிவு” படம் நன்றாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை இருப்பதால்தான் அஜித், “வாரிசு” திரைப்படத்துடன் மோத தயாராக இருக்கிறார் எனவும் அப்பேட்டியில் அந்தணன் கூறியிருந்தார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.