வாரிசு ரிலீஸ் தேதியில் கடுப்பான அஜித்!. அஜித் 62-லும் செம பிளான் இருக்காம்!...
சினிமா உலகில் இரு நடிகர்களிடையே போட்டி என்பது எப்போதும் இருக்கும் விஷயம்தான். ஆனால் அது பொறாமையாக மாறும் போது ஏட்டிக்கு போட்டியாக மாறிவிடும். அதுதான் தற்போது வாரிசு Vs துணிவாக மாறியுள்ளது. இரு தயாரிப்பாளர்களும் படத்தை ரிலீஸ் செய்வதில் மல்லுக்கட்டி வருகிறார்கள்.
கடந்த வருடங்களில் விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் பலமுறை ஒரே நாளில் வெளியாகி மோதியுள்ளது. ஆனால், தற்போது இருவருக்கும் ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல் இது பெரும் விவாதமாகவும், சமூக வலைத்தளங்களில் மோதலாகவும் மாறியுள்ளது.
கடந்த சில வருடங்களாக அஜித் - விஜய் படங்கள் ஒன்றாக வெளியாகாத நிலையில் இப்போது பொங்கலுக்கு வாரிசும், துணிவும் ஒன்றாக வெளியாவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்துவிட்டாலும் ரிலீஸ் தேதி அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இரண்டு படங்களின் டிரெய்லர் வெளியான போதும் எப்போது ரிலீஸ் என டிரெய்லரில் குறிப்பிடவில்லை.
முதலில் அவர்கள் அறிவிக்கட்டும் என்றே இருதரப்பும் இருந்தது. வாரிசு படம் ஜனவரி 13ம் தேதி வெள்ளிக்கிழமை வந்தால், நாம் ஜனவரி 12ம் தேதி வியாழக்கிழமை வருவோம் என்றுதான் அஜித்தும் திட்டமிட்டிருந்தார். ஏனெனில், செண்டிமெண்ட்டாக வியாழக்கிழமை தனது படம் வெளியாக வேண்டும் என அஜித் ஆசைப்படுவார். இதுவரை அப்படித்தான் அவரின் பல படங்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், வாரிசு படம் 12ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டதும், ஒரு நாளைக்கு முன் துணிவு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். இதைக்கண்ட வாரிசு தரப்பு எங்கள் படமும் 11ம் தேதி வெளியாகும் என அறிவித்தது. இதற்கு பின்னணியில் விஜய் இருப்பதாக அஜித் கருகிறாராம். ஏனெனில், விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் ரிலீஸ் தேதியை அவர்கள்தான் முடிவு செய்வார்கள். வாரிசு படத்திற்கு ஒரு நாள் முன்பு துணிவை வெளியிட நினைத்தால் ஏட்டிக்கு போட்டியாக வாரிசு படத்தையும் அதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டதால் அஜித் செம கடுப்பாகியுள்ளாராம்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தை இந்த வருட ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. வாரிசு ரிலீஸ் தேதியில் கோபமடைந்துள்ள அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய படத்தையும் தளபதி 67 படத்திற்கு போட்டியாக தீபாவளியன்று வெளியிட வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம்.
எனவே, வாரிசு Vs துணிவு ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது போல் தீபாவளிகும் ஒரு சம்பவம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘அழுமூஞ்சி நடிகர்’ பட்டத்தோடு சுற்றிய சிவாஜி!.. அதைமாற்ற புதிய ட்ரிக்கை யோசித்த நடிகர் திலகம்!…