கொய்யால தல யாரு! முடிஞ்சா கொடுங்க... சிறுத்தை சிவா கூட்டணியில் இருக்கும் சிக்கல்

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுமூச்சாக நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் விடாமுயற்சி படத்தையும் ஒரு பக்கம் முடித்து விடலாம் என்ற முயற்சியிலும் இருந்து வருகிறார்கள். அதற்கு ஏற்ப குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் நேராக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதாக ஒரு தகவல் வெளியானது, எப்படியும் இந்த வருட இறுதியில் விடாமுயற்சி படமும் அடுத்த வருடம் பொங்கல் அன்று குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகும் என்று தெரிகிறது,

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?!.. இப்படி ஆகிப்போச்சே!…

இந்த நிலையில் இந்த இரு படங்களுக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்து வந்தன, கங்குவா படத்தின் ஒரு க்ளிம்ஸ் வீடியோவை பார்த்து வியந்து போன அஜித் அந்த படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டியதாகவும் தனது அடுத்த படத்தை அவரே இயக்கட்டும் என்று சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியானது.

ஏற்கனவே அஜித்தை வைத்து விசுவாசம், வேதாளம், வீரம் போன்ற தொடர் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த சிறுத்தை சிவா உடன் தனது 64 வது படத்தில் அஜித் இணைய போகிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வந்த தகவலின்படி இவர்கள் கூட்டணியில் இப்பொழுது சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது .

இதையும் படிங்க: எனக்கு அதுக்கு எல்லாம் பயமில்லை… ஆனா அந்த ஒண்ணு தான் இடிக்குது… என்ன சொல்கிறார் மிஸ்கின் பட நடிகை

குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் 163 கோடி எனவும் தனது அடுத்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அஜித் 200 கோடி கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பளத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்மதிக்கவில்லையாம். அதனால் இப்போதைக்கு இந்த படத்தை பற்றிய பேச்சு அப்படியே நின்று போனதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை தயாரிப்பு தரப்பு மாறலாம் அல்லது அஜித் தனது சம்பளத்தில் கீழ் இறங்கி வருவாரா என்று என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

Related Articles

Next Story