வாஸ்துவில் மூழ்கிப் போன அஜித்..பிரபல இயக்குனரின் வீட்டை டிசைன் பண்ணியதே நம்ம ஏகே தானாம்..!

by Rohini |
ajith_mian-cine
X

தமிழ் சினிமாவில் தல என்றும் ஏகே என்றும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் வசூலில் சாதனை பெற்றது. அதை தொடர்ந்து ஏகே-61 என்ற புதிய படத்தில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.

ajith1_cine

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த 50 வது படமான மங்காத்தா படத்தை பற்றி படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் சில விஷயங்களை நமக்காக பகிர்ந்தார். அப்போது அஜித் இதுவரை முழு நெகடிவ் ரோலில் நடிக்க வில்லை அப்படி எதும் கதை இருந்தால் சொல் என கூறி ஆரம்பிக்கப்படம் தான் மங்காத்தா.

ajith2_cine

படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இந்த சமயத்தில் அஜித்திற்கும் வெங்கட் பிரபுவிற்கு பொதுவான நண்பர் ஒருவரால் கட்டப்பட்ட வீடுதான் அஜித் வீடு மற்றும் வெங்கட் பிரபு வீடும். அப்போது வெங்கட் பிரபு வீட்டிற்கு ஃபுல் டிசைன் போட்டுக் கொடுத்ததே அஜித் தானாம்.ajith3_cine

மேலும் அஜித் நன்றாக வாஸ்துவும் பார்ப்பாராம். வெங்கட் பிரபு வீட்டிற்கும் கிச்சன் முதல் பார்க்கிங் வரை எல்லாம் இங்கு தான் இருக்க வேண்டும் என்று வாஸ்து சொல்லி டிசைன் போட்டுக் கொடுத்தாராம் அஜித்.

Next Story