அஜித் சம்பளம் வாங்காம நடிச்ச அந்த படம்!.. அவர் வாழ்க்கையையே மாத்திடுச்சே!….

#image_title
மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் மேலே வந்தவர் அஜித். நிறைய கஷ்டங்களையும், அவமானங்களையும், தோல்விகளையும் பார்த்து மேலே வந்தவர். அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இருந்ததே இல்லை. மோட்டார் ரேஸில் கலந்துகொள்வதற்கு பணம் தேவைப்பட்டது. அதற்காக மாடலிங் துறைக்கு போனார். அது அவரை சினிமாவுக்குள் இழுத்து சென்றுவிட்டது.
பல வருடங்களாக சினிமாவில் நடித்து இப்போது மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். அவரின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படமும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இப்போது வெளிநாடுகளில் பைக் ரேஸ்களில் அஜித் கலந்து வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் வரை அவருக்கு கார் ரேஸ் இருக்கிறது. அது முடிந்தபின் அவர் அடுத்த பட வேலையில் இறங்கவிருக்கிறார்.

அஜித்தின் திரை வாழ்வில் பல இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் சரண் மிகவும் முக்கியமானவர். பாலச்சந்தரின் உதவியாளரான இவர் முதலில் இயக்கிய படம் காதல் மன்னன். இந்த படத்தில் அஜித்தான் ஹீரோ. இந்த படம் ஒரு காதல் கதை. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண்ணை அஜித் காதலிப்பார். அந்த காதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் மானு என்கிற புது முகம் நடித்திருந்தார். அதோடு, இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் சரணின் இயக்கத்தில் அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களில் அஜித் நடித்தார். அஜித்துடன் மிகவும் நெருங்கி பழகியவர்களில் சரணும் ஒருவர்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சரண் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். காதல் மன்னன் படம் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் லாபத்தை கொடுத்தது. ஆனால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்துவிட்டது. எனவே, வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்கும் அளவுக்கு அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது. இப்படியே 3 மாதங்கள் போனது. காதல் மன்னன் எப்படி ஒடுகிறது என்பதை கூட கவனிக்காமல் நானும் அவர்களுடன் இருந்தேன்.

ஒருகட்டத்தில் கடுப்பாகி ‘புதிதாக ஒரு படம் துவங்குகிறோம்’ என சொல்லி அலுவலகத்திற்கு வெள்ளை அடித்து ‘அமர்க்களம்’ படத்தை துவங்கினோம். இந்த படத்திற்கான சம்பள செக்கை அஜித் இதுவரை வங்கியில் போடவே இல்லை. போன படத்தில் உங்களுக்கு கடன். இந்த படத்தில் நல்ல லாபம். அந்த சந்தோஷமே எனக்கு போதும் என சொல்லிவிட்டார்’ என சரண் பேசியிருக்கிறார்.
அமர்க்களம் படத்தில் நடித்ததால்தான் ஷாலினி மீது காதல் ஏற்பட்டு அஜித் அவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.