வாலி படத்திற்கு அஜித் பணம் கொடுத்து உதவினாரா?... ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

by சிவா |
valee
X

அஜித் சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்தவர். பல வருடங்களுக்கு முன் அவரின் திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்த காலம். ஒரு வெற்றிக்காக காத்திருந்தார். அப்போதுதான் எஸ்.ஜே. சூர்யா இயக்குனராக அறிமுகமாகிய வாலி படத்தில் அவர் நடிக்க துவங்கினார். இப்படத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்தார்.

actor ajith

இப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் தயாரிப்பில் இருந்தது. அந்த ஒருடம் அஜித் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. சிம்ரன் அவ்வப்போது கால்ஷீட் கொடுத்து நடித்தார். அவருக்காக எல்லோரும் காத்திருந்தனர். ஒரு வழியாக படத்தை முடித்து வெளியிட்ட பின் படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையை மாற்றியது. இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் அஜித்.

இப்படம் தயாரிப்பில் இருந்த போது தயாரிப்பாளர் படத்தை எடுக்க முடியாமல் பணப்பிரச்சனையில் இருந்தார். எனவே, அஜித்தும் தன்னால் முடிந்த பண உதவியை செய்தார் என பல வருடங்களாகவே சினிமா வட்டாரத்தில் செய்திகள் உலா வருகிறது.

ஆனால், அந்த தகவலை தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மறுத்துள்ளார். வாலி படத்தை எடுக்கும்போது பணப்பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால், நான் அஜித்திடம் இதை கொண்டு செல்லவே இல்லை. எனவே அந்த செய்தி வதந்தி மட்டுமே என தெரிவித்துள்ளார்.

valee

சினிமா உலகில் இப்படித்தான் ஒருவர் கற்பனையாக ஒன்றை கூற அந்த செய்தி பல வருடங்கள் பலரிடமும் சுற்றிக்கொண்டிருக்கும். சம்பந்தப்பட்டவர் விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது வெளியே தெரிய வரும்.

வாலி படத்தின் வெற்றிக்கு பின் அஜித் - எஸ்.எஸ்.சக்ரவர்த்தி கூட்டணியில் சிட்டிசன் உட்பட பல படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story