விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த 100 சதவீதம் அஜித் செல்லவே மாட்டார்… பொங்கி எழுந்த விமர்சகர்…

by Akhilan |
விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த 100 சதவீதம் அஜித் செல்லவே மாட்டார்… பொங்கி எழுந்த விமர்சகர்…
X

Vijayakanth Ajith: நடிகர் அஜித்குமார் கோலிவுட்டின் மூத்த நடிகரும் விஜயகாந்துக்கு இதுவரை அஞ்சலி செலுத்தவே இல்லை. அது பூதாகரமாக பேசப்பட்டு வரும் நிலையில் கண்டிப்பாக அவர் போகவே மாட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித்குமார் கிட்டத்தட்ட கோலிவுட்டின் கோஸ்ட் என்றே சொல்ல வேண்டும். அவரை பொதுநிகழ்ச்சியில் மட்டுமல்ல முக்கியமான சில இறப்புகளில் கூட பார்க்க முடிவதில்லை. அப்படி இருக்க சமீபத்தில் உயிரிழந்த விஜயகாந்த் இறப்புக்கு அவர் செல்லவே இல்லை. கூட்டத்தில் வந்து விஜய் பார்த்து சென்றது, அந்த நேரத்தில் அஜித்தின் டான்ஸ் வீடியோ என பல சர்ச்சைகளை கிளப்பியது.

இதையும் படிங்க: சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!…

ஜெயலலிதா இறப்புக்கு அவசர அவசரமாக இரண்டு ப்ளைட் மாறி வந்தவர். விஜயகாந்துக்கு அப்படி ரிஸ்க் எதுவும் எடுக்கவே இல்லை. வெற்றி துரைச்சாமிக்கு அஞ்சலி செலுத்திய பின்னரும் கூட விஜயகாந்த் சமாதிக்கு அவர் இதுவரை செல்லவே இல்லை. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் வி.கே.சுந்தர், அஜித் தன்னுடைய விஷயங்களில் அவரே முடிவெடுப்பவர். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் அதை செய்யவே மாட்டார்.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை என எல்லாரும் பேசிக்கொண்டே இருக்கின்றனர். இது அவருக்கு கடுப்பை தான் தந்து இருக்கிறது. அதனால் 100 சதவீதம் அஞ்சலி செலுத்த நேரில் செல்ல வாய்ப்பே இல்லை. அதான் கால் செய்து அவர் குடும்பத்தினருடன் பேசிவிட்டாரே. அதுவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. அவருக்கும் விஜயகாந்துக்கும் எதோ பிரச்னை என்கின்றனர். அப்படி எல்லாம் இல்லை.

இதையும் படிங்க: வெற்றி துரைசாமி இதற்காத்தான் லடாக் பகுதிக்கு போனாரா?!. வெளியான புதிய தகவல்!..

நடிகர் சங்கம் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த முடிவெடுத்தது. ஆனால் அஜித் அங்கிருப்பவர்களும் நம் மக்கள் ஏன் அவங்க காசை நாம பிடுங்கணும். ஒரு கோடி கலெக்ட் ஆகும் தானே. இந்தாங்க என் பங்கு 10 லட்சம். இப்படி ஒரு 10 நடிகர்களிடம் வாங்கினால் போதும் என்று விஜயகாந்திடம் சொல்லி சென்றாராம்.

ஆனால் ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில் நிகழ்ச்சியை நடிகர் சங்கம் நடத்தியது. இருந்தாலும் அஜித்தினை நினைத்து விஜயகாந்த் பெருமை தான் பட்டாராம். அவர் மீது எந்த கோபமுமே இல்லையாம். கிட்டத்தட்ட தன்னை போல மக்களிடம் அஜித்துக்கும் அன்பு இருப்பதாகவே என்னிடம் பேசிக்கொண்டு இருப்பார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் கூட நடிக்க வாய்ப்பு வந்தும் நோ சொல்லிட்டேன்! என்னப் போய் அப்படி நடிக்க சொன்னா? புலம்பும் நடிகை

Next Story