ஷாலினி கேட்டும் அதை செய்யாத அஜித்!.. அவருக்கு மேல ஒருத்தர் இருக்காரு?..
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். திருமணம் ஆனதில் இருந்து அஜித்தின் சில தேவையில்லாத குணாதிசயங்களை மாற்றியவரே ஷாலினிதான் என்று பல கூறிவருகின்றனர்.
ஒரு சமயம் பழைய பேட்டிகளில் அஜித்தே தனக்கு முன்கோபம் கொஞ்சம் அதிகம் என்று கூறியிருக்கிறார். அதை முற்றிலுமாக மாற்றியவர் ஷாலினிதான் என்று சொல்கிறார்கள். மேலும் தொழிலையும் குடும்பத்தையும் தனித்தனியாக பார்ப்பவர் அஜித். இரண்டையும் போட்டு குழப்பிக்க மாட்டார்.
அதே போல் இரண்டிற்கும் தேவையான முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறார். குடும்பத்தை ஷாலினியிடமே ஒப்படைத்து விட்டார். சூட்டிங் போக மற்ற நாள்களில் குடும்பத்துடன் செலவிட எப்போதுமே அஜித் நேரத்தை ஒதுக்கி விடுவார். அதே போல் தன் கால்ஷீட் விஷயத்திலும் கதை கேட்பதிலும் ஷாலினியை இது வரைக்கு அனுமதித்ததில்லையாம் அஜித்.
ஒரு சமயம் அஜித்திற்கும் ஷாலினிக்கும் நெருங்கிய நண்பர் வெளிநாட்டில் இருக்கிறாராம். அவர் ஒரு நாள் ஷாலினியிடம் அஜித்தை வைத்து படம் பண்ணலாம் என்று நினைக்கிறேன், அஜித்திடம் கால்ஷீட் கொடுக்கச் சொல்லுங்கள் என கேட்டு சொல்கிறீர்களா? என சொல்லியிருக்கிறார்.
ஷாலினியும் அஜித்திடம் சொன்னாராம்.ஆனால் அஜித் கால்ஷீட் விஷயம் எல்லாம் சுரேஷ் சந்திரா தான் பார்த்துக் கொள்கிறார். அவரை மீறி யாருக்கும் கால்ஷீட் தருவது இல்லை என்று சொல்லிவிட்டாராம். அதே போல் தன் குடும்ப விஷயத்திலும் சுரேஷ் சந்திராவை அனுமதிப்பதில்லையாம் அஜித்.
குடும்பம் வேறு , தொழில் வேறு என அதில் கவனமாக இருப்பதால் தான் இது நாள் வரைக்கும் அஜித்தின் குடும்ப வாழ்க்கை இனிமையாக போய்க் கொண்டிருக்கிறது என பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.