பிளாப் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் அஜித்... இது ஓவர் ரிஸ்க்கா இருக்கே!....
கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. முதல் படத்திலேயே தான் ஒரு மசாலா இயக்குனர் என நிரூபித்தார். எனவே, அஜித் அவரை அழைத்து வீரம் பட வாய்ப்பு கொடுத்தார். படப்பிடிப்பில் சிவாவின் சாந்தமான அணுகுமுறை அஜித்துக்கு பிடித்துப்போக அடுத்து வேதாளம், விவேகம் என தொடர்ந்து 3 படங்கள் நடித்தார். விவேகம் படம் ரசிகர்களை கவரவில்லை என்பதால், மீண்டும் சிவாவுடன் இணைந்து விஸ்வாசம் படத்தை கொடுத்தார் அஜித். அப்படம் மாஸ் ஹிட்.
அதன்பின் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார் சிவா. ஆனால், இப்படம் ரசிகர்களை கவரவில்லை. மேலும், இப்படத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்தனர். எனவேதான், அடுத்து எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என ரஜினி மும்முரமாக இருக்கிறார்.
ஒருபக்கம் அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த பின் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களும் முடிந்த பின் மீண்டும் சிவாவுடன் இணையவுள்ளாராம் அஜித். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அஜித்தின் 63வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.