Connect with us
ajith

Cinema News

விஜய் பட இயக்குனரை டிக் அடித்த அஜித்!.. எல்லாமே சிறுத்தை சிவா கையிலதான் இருக்கு!…

தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அமராவதி துவங்கி விடாமுயற்சி வரை 62திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். சாக்லேட் பாய், காதல் கதை, ஆக்‌ஷன் கதை, மாஸ் ஹீரோ என பல பரிமாணங்களை எடுத்தவர் இவர். பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் இவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது.

இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், பனிப்புயல், மழை, கால்ஷீட் பிரச்சனை, லைக்காவின் நிதி நெருக்கடி என பல காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

இதையும் படிங்க: விஜய் போட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! SK நினைச்சது வேறு.. அங்கு நடந்தது வேறு

ஒருபக்கம் அஜித் பைக்கை எடுத்துகொண்டு பல இடங்களுக்கும் சென்றார். இந்த மாதத்தின் இறுதியில் அசர்பைசான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. இதுதான் கடைசி செட்யூல் எனவும், இதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை முடித்தவுடன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இது அஜித்தின் 63வது திரைப்படமாகும். மார்க் ஆண்டனி வெற்றிக்கு பின் ஆதிக் இயக்கும் படம் இது. அதோடு, விண்டேஜ் லுக்கில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இதையும் படிங்க: ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட க்ளைமேக்ஸ் பற்றிய ரகசியம்! இவ்ளோ வலிகளுக்கு நடுவே எடுத்த காட்சியா அது?

இந்நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவியின் அண்ணனும், தனி ஒருவன் படத்தின் இயக்குனருமான மோகன் ராஜா அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். இது அஜித்துக்கு பிடித்துப்போக அஜித் சம்மதம் சொல்லிவிட்டார். குட் பேட் அக்லி படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

mohan raja

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் அஜித்துக்கும் செட் ஆகுமா என்பது தெரியவில்லை. அதோடு, ஒரு ஹிந்தி படத்தை இயக்கவும் சிவா ஒப்புக்கொண்டுள்ளார். ஒருவேளை சிவா அங்கே போய்விட்டால் மோகன் ராஜா இயக்கத்தில் அஜித் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இல்லையெனில் சிவாவுக்கு பின் மோகன் ராஜா படத்தில் அஜித் நடிப்பார் என்றே புரிந்துகொள்ளலாம். இந்த மோகன் ராஜா விஜயை வைத்து வேலாயுதம் என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top