அஜித் நடிப்புல ஒழுக்கம் இருக்கு! ஆனால் விஜய் அப்படி இல்ல - வருங்கால தளபதியை கிழித்து தொங்கவிடும் இயக்குனர்

vijay
Ajith vs Vijay: தமிழ் சினிமாவில் இரு பெரும் பில்லர்களாக ஆண்டு வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் இவர்களுக்கு இணையான புகழை உடைய நடிகர்களாக அஜித்தும் விஜயும் போற்றப்படுகிறார்கள்.
இவர்களின் படங்கள் ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு ஒரு விழாவாகத்தான் இருக்கும். மேளதாளங்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஒரு திருவிழாவைப் போலவே கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். சமீபகாலமாக விஜய் அஜித் இருவரின் படங்கள் போட்டிப் போட்டுக் கொண்டுதான் வெளிவருகின்றன.
இதையும் படிங்க: அண்ணாமலை போட்ட கண்டிஷனால் ஆடிப்போன விஜயா… நடக்காத விஷயத்துக்கு இத்தனை கூத்தா?
இப்படி மற்றவர்களுக்கு உதாரணமாக வாழும் இந்த இரு நடிகர்களை பற்றி பிரபல இயக்குனரும் நடிகை தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் ஒரு பேட்டியில் தன் அனுபவங்களை கூறியிருக்கிறார். அதாவது விஜயின் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் சரியாக நடித்த ஒரே நடிகர் சரத்குமார் தான் என்று சொல்லியிருக்கிறார்.
மற்ற யாரும் நன்றாகவே நடிக்கவில்லை. ஏன் விஜய் கூட தப்பு தப்பாகத்தான் நடித்திருந்தார். ஒரு அப்பா முன்னாடி இப்படியா கிண்டல் அடித்து சவால் விட்டு பேசுவார்கள்? இது நியாயமான விஷயமா? உங்க அப்பா முன்னாடி நீங்க பண்ணுங்க. அதை ஸ்கீரினில் செய்தால் உங்களை பின்பற்றும் இளம் தலைமுறைகளை தவறாக தூண்டுதலுக்கு வழிவகுக்கும் அல்லவா? அதனால் விஜயை கொடூரமான ஆளாகத்தான் பார்க்கிறேன் என்று ராஜகுமாரன் கூறினார்.
இதையும் படிங்க: 3 மணி நேரம் உட்கார்ந்து பார்த்து போரடிச்ச திரைப்படங்கள்! ‘அஞ்சான்’ படத்தால் மார்கெட் இழந்த லிங்குசாமி
ஒரு தந்தையை மதிக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விஜய் இருக்கிறார் அவரது அப்பாவை அவர் வேண்டுமானால் மதிக்காமல் இருக்கலாம். அது அவருடைய இஷ்டம். ஆடியன்ஸுக்கு அதை சொல்லிக் கொடுக்கக் கூடாது. எவ்வளவு நல்ல கருத்துக்களையும் ஒழுக்கங்களையும் சொல்லிக் கொடுத்த சினிமா அதைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆனால் அஜித்தை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். கண்டிப்பாக அஜித் இந்த மாதிரி நடிக்கவே மாட்டார். நடிப்பிற்கு என்று ஒரு தனி அதிகாரமே அஜித்திடம் இருக்கிறது. அதனால் இதை கண்டிப்பாக செய்யவே மாட்டார். ஒரு ஒழுக்கம் நிறைந்த மனிதராகத்தான் அஜித் எப்பொழுதும் இருப்பார். நடிப்பார் என ராஜகுமாரன் கூறிய இந்த பேட்டிதான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!..