பீஸ்ட்ல இருக்கிற மாதிரி இருக்காது!.. அஜித்துக்கும் இது பிடிக்காது!.. படம் மாஸ் பண்ண போகுது!.. சமுத்திரக்கனி ஓபன் டாக்!..
எச்.வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் பொங்கலுக்கு வருகிற படம் துணிவு. நாள் நெருங்க நெருங்க படத்தை பற்றி எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. அஜித் ஒரு பக்கம் பக்கா ஆக்ஷனில் மூழ்கி ரசிகர்களை இந்த படத்தின் மூலம் திணற வைக்க காத்திருக்கிறார்.
வலிமை படம் முழுவதும் ரேஸ் என்றால் இந்த துணிவு படம் துப்பாக்கி சத்தமாக இருக்கும் மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தில் டிஜிபியா நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். மஞ்சு வாரியார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படம் புரோமோஷன் இல்லை என்றாலும் படத்தில் நடித்த கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பேட்டிகளின் மூலம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமுத்திரக்கனி படம் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்றும் வினோத்தின் படைப்பு எப்படி பட்டது என்றும் விவரித்திருக்கிறார்.
படம் பணத்தை பற்றியது என்று கூறிய சமுத்திரக்கனி ஒரு பணம் மனிதனை எந்த அளவுக்கு ஆட்கொள்கிறது? பணம் மனிதரை எப்படி புரட்டிப்போகிறது ? என்றெல்லாம் இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்று கூறிய அவர் அஜித் ஆக்ஷனில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறினார்.
இதையும் படிங்க : எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக அஜித்!.. அவர வாழவிடுங்க.. சோவின் கருத்தை உறுதிபடுத்து வகையில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர்!..
மேலும் நிரூபர் ஒருவர் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம் படம் முழுக்க விஜயை புகழ்வது மாதிரி அமைக்கப்பட்டிருக்கும், அந்த மாதிரி ஏதும் இருக்கா? என்று கேட்க அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி பீஸ்ட்-ல இருக்கிற மாதிரி கண்டிப்பாக இருக்காது எனவும் மேலும் அஜித் சாருக்கு தற்புகழ்ச்சி பிடிக்கவே பிடிக்காது எனவும் கூறினார்.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒரு காவல் அதிகாரி குற்றவாளியை எப்படி அணுகுவாரோ அதே மாதிரி தான் இருக்கும் மற்றபடி அந்த புகழ்ச்சி எல்லாம் இருக்காது என்று கூறினார். முதல் பாதி ரசிகர்களுக்காகவும் இரண்டாம் பாதி முழுவதும் ஒட்டுமொத்த மக்களுக்கும் உண்டான படமாக துணிவு அமையப் போகிறது என்றும் கூறினார் சமுத்திரக்கனி.