டிரெய்லர் தேவையா?…அடம்பிடிக்கும் அஜித்… ரசிகர்களையும் நினைச்சு பாருங்க தல…

Published on: December 19, 2021
ajith
---Advertisement---

நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் ஹெச். வினோத்துடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை. இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து பல தடைகளை மீறி இப்படம் முடிந்து பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் நடித்த படங்களிலேயே அவரின் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் இப்படம் தொடர்பான புரமோஷன்களை தயாரிப்பாளர் துவங்கியுள்ளார். ஏற்கனவே, 2 பாடல்கள் வெளியான நிலையில் இன்று 3வது பாடல் வெளியாகவுள்ளது. மேலும், விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அஜித்தே இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை.

Also Read

valimai2

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி பல மாதங்கள் இருக்கிறது. இந்த வீடியோ அஜித் உட்பட படக்குழு அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இவ்வளவு பில்டப் இந்த படத்திற்கு தேவையா? என யோசித்து இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என அஜித் கூறியுள்ளாராம். இந்த டிரெய்லர் வெளிவந்தால் இப்படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகும். அந்த அளவுக்கு படம் இல்லையெனில் ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக முடியும். நேரிடையாக படத்தையே வெளியிட்டு விடலாம் என அவர் யோசித்து வருகிறாராம்.

ajith

பொதுவாக டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்களை வெளியிட்டு படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தியேட்டருக்கு அவர்களை வரவழைக்கும் யுக்தியை தயாரிப்பாளர்கள் பல வருடங்களாக செய்து வருகிறார். ஆனால், அஜித் இதையெல்லாம் விரும்பாதவர்!. அதனால்தான் கொரோனா ஊரடங்கின் போது வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாம் என ஒரு வருடம் ரசிகர்களை காக்க வைத்தார்.

அதேநேரம் ரசிகர்களின் மன நிலையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்?..

வலிமை டிரெய்லர் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்….

Leave a Comment