நீங்க கண்டிப்பா மிஸ் பண்ணுவீங்க!.. அஜித் ரொமாண்டிக் ஹீரோவாக கலக்கிய டாப் 5 படங்கள்!..
நடிகர் அஜித்தை பற்றி அறிமுகம் தேவையில்லை. தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக தலை நிமிர்ந்து வெற்றி நடைபோட்டு வரும் முன்னனி நடிகர் அஜித். ஆரம்பகாலங்களில் ஏறுமுகம் இறங்குமுகம் இருந்த நிலையில் அவருடைய மார்கெட்டை சரியான விதத்தில் தீர்மானித்து அவராகவே சரிசெய்து கொண்டார். மேலும் ஒரு சார்மிங் பாயாக கலக்கிய அஜித் சமீபகாலமாக ரொமாண்டிக் படங்களை தவிர்த்து வருகிறார். முழு ஆக்ஷன் ஹீரோவாகவே அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்த ரொமாண்டிக் படங்களின் பட்டியலை தான் இப்போது பார்க்க இருக்கிறோம். முதலாவதாக,
1.ஆசை:
மணிரத்னம் படம் என்றாலே காதல் திகட்டுகிற அளவுக்கு தான் இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. 1995 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் அஜித்- சுவலெட்சுமி ஆகியோரின் கெமிஸ்ட்ரி இன்றளவும் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக சித்தரித்த படங்களில் ஆசை படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது..
2. காதல் கோட்டை:
அஜித்தின் கெரியரிலேயே காதல் படங்களில் மிகச்சிறந்த படங்களில் காதல் கோட்டை முக்கியமாக கருதப்பட்டது. காதலை பற்றி காலங்காலமாக சொல்லிவந்த உண்மைகளை தவிடு பொடியாக மாற்றியது இந்தப் படம் தான். காதல் அன்போடு காமம் சம்பந்தப்பட்டது என்பதை முற்றிலும் தவிர்த்தது இந்தப் படம். பார்க்காமலேயே வெறும் கடிதங்கள் பரிமாற்றுதலில் உயிராக கருதிய இரு ஜீவன்களை பற்றிய கதைதான் காதல் கோட்டை.
3. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்:
இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடித்திருப்பார். மேலும் இந்தப் படத்தில் ஒரு வளரும் இயக்குனராக அஜித் நடித்து கூடவே தபுவுடனான காதல் எப்படி வெற்றியில் சந்திக்கிறது என்பது பற்றிய கதைதான் இது. படத்திற்கு நாடி நரம்பாக விளங்கியதே ஏ.ஆர்.ரகுமான் இசை தான். அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
4. வாலி:
அஜித் முதன் முதலில் இரட்டை வேடங்களில் நடித்த படம் தான் வாலி. இந்த படத்தில் அஜித் சிம்ரனின் கெமிஸ்ட்ரி அந்தக் காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு துடிப்பான துரு துரு இளைஞனாக அஜித் வந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மறுபக்கம் காது கேளாத வாய் பேசமுடியாத வில்லன் கதாபாத்திரத்தில் யாரும் எதிர்பாராத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அஜித்.
5. பூவெல்லாம் உன்வாசம்:
2001 ஆம் ஆண்டில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தை எழில் எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். அஜித்திற்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். படம் பல விருதுகளை பெற்றுக் குவித்தது.
இதையும் படிங்க : கடுப்பாகி காசு கொடுக்க மறுத்த தயாரிப்பாளர்.. நாயகன் படத்த எப்படி எடுத்தாங்க தெரியுமா?!..