காருக்குள் இருந்த அஜித்திற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்!.. சும்மா லெஃப்ட் ரைட் விட்ட தல!.. அடுத்து செஞ்ச காரியம் தான் உச்சக்கட்டமே!..
அஜித் என்ற ஒரு பெயர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாகவே மாறிப் போயிருக்கிறது. எந்த ஒரு விளம்பரமும் இல்லை, விழாக்களில் கலந்து கொள்வதும் இல்லை, ரசிகர்களை சந்திப்பதும் இல்லை என்று தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கும் ஒரு சாதாரண மனிதருக்கா இத்தனை கோடி ரசிகர்கள் என்று சினிமா பிரபலங்களையே ஆச்சரியப்பட வைக்கிறார் அஜித்.
மற்ற முன்னனி நடிகர்கள் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது, ரசிகர் மன்றங்கள் சார்பாக சில உதவிகளை செய்வது என அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கின்றனர். ஆனால் இப்படி எதுவும் செய்யாமலயே இத்தனை கோடி ரசிகர்கள் அவர் பின்னாடி சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க : சிவாஜியின் கெரியரில் முக்கியமான பாடல்.. கதையின் கருவை ஒரே வரியில் விவரித்த கண்ணதாசன்!..
அதன் உச்சக்கட்டமாகத்தான் சமீபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம். அஜித்தை ஒரு முறையேனும் சந்தித்து விடுவோமா? என்று ஏங்காத ரசிகர்கள் இல்லை. அப்படிப்பட்ட ரசிகர்களால் சந்தித்த பல பிரச்சினைகள் அஜித்தின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த சம்பவம்.
ஒரு படப்பிடிப்பிற்காக அஜித் காரில் போய்க் கொண்டிருந்த போது அதை தெரிந்த ரசிகர் ஒருவர் காரை நிறுத்தி காருக்கு பாலாபிஷேகம் செய்திருக்கிறார். அதாவது பல பால் பாகெட்களை வாங்கி வந்து கார் கண்ணாடி எல்லாம் பாலை ஊற்றி அபிஷேகம் செய்திருக்கிறார். அதில் டென்ஷனான அஜித் வெளியே இறங்கி ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?
பாருங்க முன்னாடி இருக்கிற வின் ஷீல்டு எல்லாமே பாலாயிருச்சு என்று சத்தம் போட்டிருக்கிறார். அதன் பின் கண்ணாடியை வைபர் வைத்து துடைக்க பிசு பிசு என்றாகிவிட்டதாம். அதை பார்த்து கூட கொஞ்சம் காண்டாகி விட்டாராம் அஜித். அவரை பார்த்த அந்த ரசிகர்கள் சில பேர் பக்கத்து கடையில் இருந்து சில வாட்டர் பாட்டில்களை வாங்கி வந்து
கார் முழுவதும் ஊற்றி துடைத்தும் கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னரே வழக்கம் போல அறிவுரைகளை வழங்கி அஜித் பின் சென்றிருக்கிறார். இதை இயக்குனரும் கதாசிரியருமான சுபா ஒரு பேட்டியில் கூறினார்.