தியேட்டரில் அலப்பறை செய்த விஜய் ரசிகர்கள்!. போட்டு பொளந்த அஜித் ரசிகர்கள்!. வைரல் வீடியோ!…

Good bad ugly: விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். சினிமாவில் ரஜினி - கமல் ரசிகர்கள் சண்டைக்கு பின் விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் துவங்கியது கடந்த 20 வருடங்களுக்கும் மேல் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை போட்டு வருகிறார்கள். அதுவும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் வந்த பின் மோதல் இன்னமும் அதிகரித்துவிட்டது.
விஜயை அசிங்கமாக விமர்சித்தும், திட்டியும் அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்வார்கள். அதேபோல் விஜய் ரசிகர்களும் செய்வார்கள். விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் அந்த படத்தை மோசமாக விமர்சித்து டிவிட்டரில் பதிவிடுவார்கள். இதற்கு வஞ்சம் தீர்ப்பது போல அஜித் படம் ரிலீஸாகும்போது விஜய் ரசிகர்களும் அதையே செய்வார்கள்.

சில சமயம் தியேட்டர்களில் அஜித் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வதும் உண்டு. அஜித் படம் ஓடும் தியேட்டர்களுக்கு போய் விஜய் ரசிகர்கள் தளபதி.. தளபதி.. என கத்துவார்கள்… இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். அதேபோல், விஜய் படம் ஓடும் தியேட்டருக்கு போய் அஜித் ரசிகர்கள் தல வாழ்க.. தல வாழ்க என கத்துவார்கள். இதனால் தியேட்டரில் இரு நடிகர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்வார்கள்.
இது அடிக்கடி நடக்கும். இப்போது அஜித்தின் குட் பேட் அக்லி ஓடும் தியேட்டரிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்க துவங்கிவிட்டது. சென்னையில் குட் பேட் அக்லி ஓடும் ஒரு தியேட்டருக்கு சென்ற சில விஜய் ரசிகர்கள் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது TVK.. TVK என கத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை தாக்கியிருக்கிறார்கள். இதனால் சில நிமிடங்கள் படம் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் பகிர்ந்து ‘சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி’ என பதிவிட்டுள்ளார்.
GoodBad Ugly ஓடிய தியேட்டரில் TVK, TVK என கத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 12, 2025
சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி.pic.twitter.com/RJpc3K9Axu