தாறுமாறான விலையில் வலிமை டிக்கெட்...அஜித் ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம்...

தியேட்டரில் அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால், பல திரையரங்கு உரிமையாளர்கள் அதை பின்பற்றுவதில்லை. அதிலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் 3 நாட்களுக்கு விலை தாறுமாறாக இருக்கும். குறிப்பாக முதல் நாளில் 1000 முதல் 5 ஆயிரம் வரைக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதிலும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு சொல்லவே தேவையில்லை. முதல் காட்சியே படத்தை பார்க்க வேண்டும் […]

Update: 2021-12-30 04:44 GMT

தியேட்டரில் அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால், பல திரையரங்கு உரிமையாளர்கள் அதை பின்பற்றுவதில்லை. அதிலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் 3 நாட்களுக்கு விலை தாறுமாறாக இருக்கும்.

குறிப்பாக முதல் நாளில் 1000 முதல் 5 ஆயிரம் வரைக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதிலும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு சொல்லவே தேவையில்லை. முதல் காட்சியே படத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படும் வெறிபிடித்த ரசிகர்கள் அந்த விலையை கொடுத்தும் படத்தை பார்த்து வருவது வழக்கமாகி விட்டது. இதில், பல கோடி கருப்பு புணம் புலங்குகிறது. ஆனால், இதையெல்லாம் அரசும் கண்டு கொள்வதில்லை. அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கோவையில் இதை தடுக்க அஜித் ரசிகர்கள் செய்துள்ள செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்துள்ளனர். அதில், ‘கோவையில் மொத்தம் 50 தியேட்டர்களில் வலிமை படம் ரிலீஸ் ஆகவுள்ளது. தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் இணைந்து ஒரு டிக்கெட் விலை ரூ.1000 என சட்டவிரோதமாக நிர்ணயித்தளனர்.

அதோடு, 12ம் தேதி இரவு 1 மணிக்கு சட்டவிரோதமாக ஒரு காட்சியை திரையிட திட்டமிட்டுள்ளனர். அந்த காட்சிக்கும் அதிகமான டிக்கெட் விலையை நிர்ணயித்துள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு விடாமல் ஒரு புள்ளி விபரத்தையும் அந்த மனுவில் இணைத்துள்ளனர். அதாவது, கோவையில் 50 தியேட்டர்கள் அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தால் ரூ.2 கோடியே 40 லட்சம் வசூலாகும். ஆனால், ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1000 எனில் ஒரு நாளைக்கு ரூ.20 கோடி வசூலாகும். இதன் மூலம் ரூ.17 கோடியே 60 லட்சம் அரசை ஏமாற்றி அவர்கள் சம்பாதிக்க வாய்ப்புண்டு.

ஒரு நாளைக்கு ரூ.17 கோடி எனில் 5 நாளைக்கும், 10 நாட்களுக்கும் கணக்கிட்டால் இந்த பணம் எங்கோ செல்லும். கோவையில் மட்டும் இவ்வளவு எனில், தமிழகம் முழுவதும் எவ்வளவு கோடி அரசை ஏமாற்றி இவர்கள் சம்பாதிப்பார்கள்?..’ என்கிற புள்ளி விபரத்தோடு அவர்கள் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுபற்றிய உங்கள் கருத்தை இங்கே பதிவிடுங்கள்..

Tags:    

Similar News