Ilaiyaraja: இப்போது காப்பி ரைட்ஸ் என்ற ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் தலைத்தோங்கி வருகிறது. குறிப்பாக இளையராஜாவால்தான் இந்த ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் தனது கண்மணி அன்போடு பாடலை தன் அனுமதியின்றி பயன்படுத்தினார்கள் என்று அந்தப் படத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா. அதிலிருந்தே இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது.
ஆனாலும் இளையராஜா விட்டபாடில்லை. குட் பேட் அக்லி படத்தில் தன் மூன்று பாடல்களை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதால் எனக்கு 5 கோடி இழப்பீடு தரவேண்டும் இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார் இளையராஜா. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா இப்படி ஒரு நோட்டீஸை அனுப்பியதில் இருந்து அஜித் ரசிகர்கள் இளையராஜாவை வச்சு செய்து வருகின்றனர்.
காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை இளையராஜாவின் இசையையே கேட்டு வந்தவர்கள் கூட இப்போது இளையராஜாவின் இந்த செயலால் மன வருத்தத்தில் உள்ளனர். இளையராஜா ரமணரைத்தான் தன்னுடைய குருவாக வழிபட்டு வருகிறார். அந்த ரமணரே வெறும் கோமணத்துடன் தான் இருக்கிறார். ஆனால் இளையராஜா? மேலும் IPRS என்ற அமைப்பில் இருந்தும் இளையராஜாவுக்கு பணம் கொட்டுகிறது.
எந்த மூலையில் இளையராஜாவின் பாடலை யார் பாடுகிறார்களோ உடனே ராயல்டி அடிப்படையில் இந்த அமைப்பு இளையராஜாவுக்கான ஒரு கணிசமான தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் பல இசையமைப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இளையராஜாவுக்கு இருக்கும் சொத்து சொல்ல முடியாது. ஆனால் இப்படி நஷ்ட ஈடு கேட்டுத்தான் அவர் பொழப்பை ஓட்டணுமா என்ன?
சரி தன் பாடல் உலகெங்கும் ஒலித்தால் அவருக்குத்தானே பெருமை. ஆனால் அதை விட்டு என் பாடலை யார் பயன்படுத்தினாலும் அதற்கு அனுமதி வாங்க வேண்டும். இல்லையெனில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இளையராஜா சொல்வது அவருடைய ரசிகர்களுக்கே கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது. ஏன் ஒரு சின்ன தியாகம் கூட செய்ய மாட்டாரா இளையராஜா?

ஏற்கனவே ஒரு கம்பெனிக்கு இளையராஜா ராயல்டி அடிப்படையில் தன் இசையை விற்று விட்டார். அந்த கம்பெனியில்தான் இளையராஜாவின் இசையை பயன்படுத்துவதற்கான அனுமதியை மற்ற பட நிறுவனங்கள் பெற வேண்டும். அப்படித்தான் குட் பேட் அக்லி பட நிறுவனமும் உரிய ராயல்டியை பெற்று விட்டார்கள். அப்படி இருக்கும் போதும் தனக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இளையராஜா சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்பது போல் அந்தணன் பேசியிருக்கிறார்.