Good Bad Ugly: படம் பார்க்க வருபவர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா? தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்

ajith_good
Good Bad Ugly: அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா, அர்ஜூன் தாஸ், யோகிபாபு, பிரபு , பிரசன்னா , சுனில் என பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அர்ஜூன் தாஸ்தான் இந்தப் படத்தில் மெயின் வில்லனாகவே நடித்திருக்கிறார்.
படம் ரசிகர்களை எந்தளவு பூர்த்தி செய்துள்ளது என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் எந்தளவு ஏமாற்றியதோ அதை விட பல மடங்கு குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாது மற்ற ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக இருக்கும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. அப்படிப்பட்ட ஒரு விஷயம் படத்தில் அமைந்துள்ளதாக படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே தெரிகிறது.
ஆனால் இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் எப்போதும் போல படத்தை பற்றி கலவையான விமர்சனங்களே வந்த வண்ணம் இருக்கின்றன. காலையில் இருந்தே வலைதளம் முழுக்க பிஸியாகத்தான் இருக்கின்றன. அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் வெளி நாடுகளில் முன்பே படம் வெளியானதால் வெளி நாட்டு தமிழ் ரசிகர்கள் படத்தை பற்றி அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித் ரசிகர்கள் படம் பார்க்க வரும் ஒவ்வொருவரின் இருக்கையிலும் விக்ஸ் மற்றும் ஹால்ஸ் மிட்டாய்களை வைத்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளனர். ஏனெனில் படம் முழுக்க ஃபேன்ஸ்களை கத்த வைத்திருக்கிறாராம் ஆதிக. அதனால் கத்தி கத்தி தொண்டையில் கிச் கிச் ஏற்படும் என்ற காரணத்தினால் ஒவ்வொரு இருக்கையிலும் விக்ஸ் மற்றும் ஹால்ஸ் மிட்டாய்களை வைத்த வண்ணம் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான படமாகத்தான் இருக்கப் போகிறது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதுமா? படத்தில் அஜித்தை மட்டும் காட்டினால் போதுமா? கண்டெண்ட் வேணாமா ஆதிக் ப்ரோ என்றும் படம் பார்த்தவர்கள் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.