கத்தி கத்தி தொண்டையில் கிச் கிச்.. ஒவ்வொரு சீட்டிலும் ஒரு விக்ஸ்!.. தாங்க முடியலடா சாமி!…

by சிவா |   ( Updated:2025-04-10 00:24:34  )
good bad ugly
X

good bad ugly

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டன. ஏனெனில், அஜித்தை எவ்வளவு மாஸாக காட்ட முடியுமோ அவ்வளவு மாஸாக காட்டியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். எனவே, படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

மேலும், இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் கூஸ்பம்ஸை ஏற்படுத்தும் காட்சிகள் நிறையவே இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க அஜித்தை வைத்து அதகளம் செய்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். ஒரு பக்கா ஃபேன் பாய் மொமெண்டில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே, படம் முழுக்க அஜித்துக்கான பில்டப் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. எனவே, தியேட்டரில் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம்.

பொதுவாக விஜய், அஜித் படங்கள் என்றால் ரசிகர்கள் தியேட்டரில் கத்திக் கொண்டே இருப்பார்கள். பன்ச் வசனம் பேசினாலும், மாஸான காட்சிகள் வந்தாலும் ரசிகர்களின் சப்தம் காதை கிழிக்கும். இந்நிலையில் தமிழகத்தின் சில தியேட்டர்களில் கத்தி கத்தி தொண்டையில் கிச் கிச் வரக்கூடாது என்கிற நல்லெணத்தில் ஒவ்வொரு இருக்கையிலும் விக்ஸ் அல்லது ஹால்ஸ் மாத்திரைகளை அக்கறையோடு வைத்திறார்கள் அஜித் ரசிகர்கள்.

இதுவரைக்கும் பல ரஜினி, அஜித், விஜய் படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால், யாருக்கும் இப்படி ஒரு யோசனை தோன்றியது இல்லை. விக்ஸ் கொடுத்த மற்ற நடிகர்களின் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் ஓவர்டேக் செய்துவிட்டார்கள் என்றே எண்ண தோன்றுகிறது.

Next Story