பீஸ்ட்டை பாராட்டும் அஜித் ரசிகர்கள்...தாறுமாறா வைரலாகும் வீடியோ...

மாஸ்டருக்கு பின் விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் படத்திற்கு பின் நெல்சன் இப்படத்தை இயக்கிதாலும், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது. நெல்சன் படமாகவும் இல்லாமால், விஜயின் படமாகவும் இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாமல் இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும், இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளிவந்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.36 கோடியை தாண்டினாலும், அடுத்த நாள் வசூல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் அந்த அளவுக்கு மோசமில்லை என அஜித் ரசிகர்கள் சிலரே தெரிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் அஜித் ரசிகை ஒருவர் படம் நன்றாக இருப்பதாகவே கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் பேசும் விஜய் ரசிகர்கள் ஒருவர் ‘அஜித் ரசிகர்கள்தான் இப்படம் சரியில்லை என பேசி வருகிறார்கள். தமிழ்நாடு என்றால் தளபதிதான்’ என உருகி பேசியுள்ளார்.

Related Articles
Next Story
Share it