Connect with us

Cinema News

லைக்காவை கண்டுபிடிச்சி கொடுத்தா சன்மானம்!.. விடாமுயற்சி அப்டேட் கேட்டு அஜித் பேன்ஸ் அடித்த பேனர்..

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். மற்ற நடிகர்களிலிருந்து இவர் முற்றிலும் மாறுபட்டவர். இவரை ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பார்க்கலாம். இல்லையெனில் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் ஓட்டிக்கொண்டிருக்கும் போது பார்க்கலாம். அதுதான் அவரின் உலகம்.

எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகர் இவர். படப்பிடிப்பு தளத்தை தவிர ரசிகர்களை வேறு எங்கும் சந்திக்கமாட்டார். ஆனாலும், இவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. இன்னமும் விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக அஜித் இருக்கிறார்.

இதையும் படிங்க: எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா!.. ரீ ரிலீஸ் படங்களை போட்டு ஓட்டுற நிலைமைக்கு வந்த கமலா தியேட்டர்!..

இப்போது விடாமுயற்சி எனும் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் தலைப்பை அறிவித்து 10 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், படமோ முடிந்தபாடில்லை. ஷூட்டிங் முடியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த படம் தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

ajith

எனவே, அஜித்தின் ரசிகர்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு முன்பு அசர்பைசானில் துவங்கியது. ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தநிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அசர்பைசானில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தும் சூழ்நிலை இல்லை என்பதால் வேறு இடத்தை தேடி வருகிறார்கள் என செய்திகள் வெளியானது..

இதையும் படிங்க: வாய்வலிக்க முத்தம் கொடுத்துட்டு இப்போ CM.. விஜயை மறைமுகமாக தாக்கிய மன்சூர் அலிகான்

இதுவரை இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை. அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ‘லைக்காவை காணவில்லை.. விடாமுயற்சி டைட்டில் விட்டு 300 நாளாச்சு. படத்தோட அப்டேட் என்னாச்சு. கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம்’ என பேனர் அடித்துள்ளனர்.

banner

அஜித் ரசிகர்கள் உருவாக்கிய இந்த பேனர் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வலிமை படம் உருவானபோதும் இப்படித்தான்.. படத்தின் அட்பேட் வரவே இல்லை. எனவே, கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூட வலிமை அப்பேட் கேட்டு பேனர் காட்டியது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top