More
Categories: Cinema News latest news

அஜித்துக்கே அந்த நிலைமை தான்!.. திரிஷாவுக்கு மட்டும் எல்லாம் மாறிடுமா!.. எதிர்பார்க்காதீங்க ஃபேன்ஸ்!

நடிகை திரிஷாவின் 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் போட்டுள்ள வாழ்த்துக்கள் ட்வீட்டை பார்த்தா அஜித் ரசிகர்கள் மீண்டும் கடுப்பாகி உள்ளனர். கடந்த மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது தரமான இன்ட்ரோ டீசர் ஏதாவது வெளியீடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அல்வா தான் கிடைத்தது.

இந்நிலையில், இன்று திரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தில் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது லைகா வெளியிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: முத்துவுக்காக சீரியல் பார்க்கும் அன்பர்களே… சிறகடிக்க ஆசை பக்கம் போகாதீங்கப்பா!

ஜோடி படத்தில் சிறு வேடத்தில் நடித்த திரிஷா அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சென்னையில் பிறந்து வளர்ந்த திரிஷா தென்னிந்திய மொழிகளில் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

பல வருடங்களுக்கு முன்பு வருண் மணியன் என்பவருடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அது திருமணம் வரை செல்லவில்லை. சிலருடன் நடிகை திரிஷாவுக்கு நெருக்கம் என கிசுகிசுக்கள் கிளம்பின.

இதையும் படிங்க: பெத்த சம்பளம் கேட்கும் சந்தானம்!.. இங்க நான் தான் கிங்குன்னு அலப்பறை வேற!.. படம் தப்பிக்குமா?..

கொரோனா காலத்தில் சிம்புவை தான் திரிஷா திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் வெளியாகின. கடைசியாக லியோ படத்தின் சமயத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷாவை வைத்து ஏகப்பட்ட வதந்திகளையும் பரப்பினர். ஆனால் இன்னமும் நடிகை திரிஷா திருமணமாகாமல் முரட்டு சிங்கிள் ஆகவே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடாமல் வெறும் விடாமுயற்சி ஹாஷ்டேக்கை மட்டுமே லைகா நிறுவனம் பதிவிட்டது. அதே போலத்தான் திரிஷா பிறந்தநாளுக்கும் வெறும் பிறந்தநாள் வாழ்த்து மட்டும் தான். அந்த போஸ்ட்டுக்கு கீழ் அஜித் ரசிகர்கள் லைகாவை திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், விடாமுயற்சி படம் மீண்டும் ஆரம்பிப்பது சந்தேகம் தான் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் மீண்டும் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: அரண்மனை 4 கல்லா கட்டுச்சா?.. காணாமல் போச்சா?.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?..

Published by
Saranya M

Recent Posts