விடாமுயற்சி அப்டேட் இல்ல!.. வேற வழியில்லாம அந்த சம்பவத்தை டிரெண்டிங் பண்ணும் தல ஃபேன்ஸ்...
நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது தொழில் மட்டுமே. கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது, ரிமோட் மூலம் இயங்கும் ஹெலிகாப்டர் இயக்குவது, கேமராவில் படம் எடுப்பது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது என அவருக்கு பல ஆர்வங்கள் இருக்கிறது. பல வருடங்களாகவே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இதை எல்லாவற்றையும் அஜித் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்தில் ரேஸில் கலந்து கொண்டு விபத்து ஏற்பட்டு பல மாதங்கள் படுக்கையில் இருந்தார். அதில்தான் அவரின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.
அதன்பின் அவர் எந்த ரேஸிலும் கலந்துகொள்வதில்லை. அதேநேரம் அவர் நடிக்கும் படங்களில் வேகமாக பைக் ஓட்டுவது, அசத்தலாக கார் ஓட்டுவது ஆகிய காட்சிகளில் நடித்து அவரின் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு சில பரிசுகளையும் வாங்கினார். அதேபோல், சமீபத்தில் கூட பைக்கை எடுத்துக்கொண்டு உலக சுற்றுப்பயணம் செய்ய போய்விட்டார்.
விடாமுயற்சி என படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. ஏற்கனவே வலிமை படத்துக்கு அப்டேட் கேட்டு அவரின் ரசிகர்கள் ஓஞ்சி போனதால் இப்போதும் ‘வந்தா பாத்துக்கலாம்’ என்கிற மூடுக்கு வந்துவிட்டார்கள்.
மேலும், கடந்த வருடம் இதே நாளில் அதாவது ஜூலை 27ம் தேதி திருச்சியில் ஒரு துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்களை பெற்றார். எனவே, அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். மேலும் #ajithkumar #VidaaMuyarchi #PeoplesHeroAJITHKUMAR போன்ற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, அந்த போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து அவர் கையசைத்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொப்பைக்கே தனி லக்கேஜ்!.. அஜித்தை கிண்டலடித்த பிரபலம்!.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!…