விஜயின் கோட் ரிலீஸ்.. ரசிகர்களை ஏமாற்றிய அஜித்!.. இப்படி ஒன்னும் இல்லாம போச்சே!..

by சிவா |   ( Updated:2024-08-31 14:22:09  )
ajith
X

#image_title

Ajithkumar: கோலிவுட்டில் விஜய்க்கு போட்டி நடிகராக பார்க்கப்படுபவர் அஜித். எந்த சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். சாக்லேட் பாயாக நடிக்க துவங்கி, ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி இப்போது மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார். ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை.

அஜித்திடம் ஒரு பழக்கம் உண்டு. வேகவேகமாக படங்களில் நடிக்க மாட்டார். அவரின் படப்பிடிப்புகள் மிகவும் பொறுமையாகவே நடக்கும். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் அஜித்துக்கு இருப்பது போலவே தெரியவில்லை. அதற்கு காரணம் அவருக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே.

இதையும் படிங்க: கோட் பட பட்ஜெட்!.. விஜயின் சம்பளம் இதுதான்!. அட அர்ச்சனாவே சொல்லிட்டாங்களே!…

பைக் ஓட்டுவது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது என அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. அடிக்கடி விலை உயர்ந்த பைக்குகளை எடுத்துக்கொண்டு ஊரை சுற்ற போய்விடுவார். இந்தியாவின் பல பகுதிகளில் அஜித் பைக் ஓட்டியிருக்கிறார்.

உலகம் முழுவதும் பைக்கால் சுற்றி வர வேண்டும் என்பதே அஜித்தின் ஆசையாக இருக்கிறது. ஏற்கனவே பல நாடுகளிலும் பைக் ஓடிவிட்டார். அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் 2023ம் வருடம் ஜனவரியில் வெளியானது. அதன்பின் இதுவரை அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை.

vidaamuyarchi

அதற்கு காரணம் விடாமுயற்சிக்கு அஜித் எடுத்துக்கொண்ட நேரம்தான். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி 8 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. துவக்கத்தில் அஜித்தால் தாமதமானது. அதன்பின் அஜித் நடிக்க வந்தும் வேறு சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை. இன்னும் ஒரு பாடல் காட்சி பாக்கி இருக்கிறது.

விடாமுயற்சி படம் 2024 தீபாவளிக்கு என அறிவிக்கப்பட்டு பின்னர் 2025 பொங்கலுக்கு தள்ளி போய்விட்டது. எனவே, 2024ம் வருடம் அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை. துணிவோடு ஒப்பிட்டால் அப்படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்தே விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கிறது.

விஜயின் லியோ 2023 அக்டோபரில் வெளியான நிலையில் அடுத்த 10 மாதத்தில் அவரின் கோட் படம் வெளியாகிறது. மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு 2024ம் வருடம் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தின் 4வது சிங்கிளும் போச்சா? மொத்தமா ஏமாத்திபுட்டாங்கப்பா..

Next Story