ஆறு மாசமாச்சி.. நாசமா போச்சி!.. விடாமுயற்சியால் விரக்தியான அஜித் ஃபேன்ஸ்!.. ஹேஷ்டேக்கை பாருங்க!..

நடிகர் அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு படம் முடிந்ததும் உடனே அடுத்த படத்துக்கு ரெடியாக மாட்டார். யாருடைய இயக்கத்தில் நடிக்க தோன்றுகிறதோ அவரை அழைத்து கதையை தயார் பண்ண சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் சுற்ற கிளம்பிவிடுவார்.. சில மாதங்கள் கழித்து திரும்பி வந்து கதை கேட்பார்.

பிடிக்கவில்லை எனில் வேறு கதை பண்ண சொல்லிவிட்டு மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றப்போய் விடுவார். கடந்த சில வருடங்களாக அஜித் இதைத்தான் செய்து வருகிறார். ஆனாலும், அவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் வசூலை வாரிக்குவிப்பதால் அவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: தடை அதை உடை… விடாமுயற்சியில் முன்பே ஜெயிச்சுக் காட்டிய அஜித்… தாணுவே மிரண்ட சுவாரஸ்ய சம்பவம்..!

துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 மாதம் ஆகிவிட்டது. விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டது. ஆனால், படப்பிடிப்போ, படத்தின் பூஜையோ இதுவரை துவங்கப்படவில்லை. அபர்பைசானில் படப்பிடிப்பு துவங்குகிறது என செய்திகள் வருகிறதே தவிர ஒரு அப்டேட்டையும் அப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை.

ஆனால், அதே நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 பட அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்களும், யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இதையும் படிங்க: அடங்கப்பா… இப்போவாது மனசு வந்துச்சே… விடாமுயற்சி டீமுக்கு ஷாக் கொடுத்த அஜித்..!

வாரிசு படமும் துணிவு படமும் ஒன்றாகத்தான் வெளியானது. வாரிசு படத்தை முடித்த விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு, வெங்கட்பிரபு படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். ஆனால், விடாமுயற்சி பற்றி முக்கிய அப்டேட்டுகள் ஒன்றும் வெளிவரவில்லை.

இது அஜித் ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது. எனவே, பட அறிவிப்பு வெளியாகி 6 மாதம் ஆகிவிட்டது. ஒரு அப்டேட்டையும் கொடுக்கவில்லை எனக்கூறி சமூகவலைத்தளங்களில் #DisappointingLycaProductions என்கிற ஹேஷ்டேக்கில் தங்களின் கோபத்தை காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்ஜெட்டே இத்தனை கோடிதான்!. இதத்தான் பிரம்மாண்ட படம்னு சொன்னியா தலைவா?!..

 

Related Articles

Next Story