வெட்கமா இருக்கு… நன்றியை மறந்தாரா?… அஜித் செயலால் கடுப்பான ரசிகர்கள்..

Published on: May 2, 2023
ajith
---Advertisement---

கோலிவுட் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும் பிரபலங்களும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் அஜித் தற்போது நேபாளத்தில் பைக் சுற்றுப் பயணத்தில் இருந்து வருகிறார். வரும் 8ம் தேதி அன்று சென்னைக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவரது பிறந்த நாளை ஒட்டி ஏகே 62 படத்தின் தலைப்பையும் யார் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்பதை பற்றியும் இன்று லைக்கா நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என்ற தலைப்பு பெயரிடப்பட்டுள்ளது. படத்தை மகிழ்திருமேனி தான் இயக்குகிறார்.

இந்த நிலையில் நேற்று அஜித்தின் நண்பரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான சக்கரவர்த்தி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.

இந்தச் செய்தி திரையுலகை சார்ந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் நேரில் போய் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தனர். அஜித்தை வைத்து கிட்டத்தட்ட 13 படங்கள் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். அதில் பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை அள்ளியது.

ஆகவே அஜித் அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு நேரில் வருவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் வழக்கம் போல் எதிலும் கலந்து கொள்ளாத அஜீத் சக்கரவர்த்தி மரணத்திற்கும் வரவில்லை. இந்த செய்தி பெரும் சர்ச்சையாகி வருகின்றது.

இதைப் பற்றி அஜித் ரசிகர்கள் பலரும் இணையத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது சிவாஜி இறந்தபோது மணாலியில் இருந்து இரவோடு இரவாக வந்த அஜித் நினைத்திருந்தால் சக்கரவர்த்தி மரணத்திற்கும் கண்டிப்பாக வந்திருக்க முடியும் என்று இணையத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : என் படத்தை எனக்கே போட்டுக் காட்டுறீயா?.. காண்டான கமல்.. விஜய் ஆண்டனி படத்திற்கு வந்த சோதனை..

அதுமட்டுமல்லாமல் இதுவரை தல ரசிகர்களாக பெருமைப்பட்டோம். இனி இதை நினைத்து வெட்கப்படுகிறோம். தன்னை வளர்த்து விட்ட ஒரு மனிதனின் இறப்பை விட பைக் சவாரி முக்கியமானதா? இனி எந்த சூழ்நிலையிலும் அஜித் அவர்களின் படங்களை பார்க்க மாட்டோம் என்று அஜித் ரசிகர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.