அஜித்திற்கு பிடித்த பாடல்!..குடும்பமே ரிங் டோனாக வைச்சிருந்து கும்மாளம் போட்ட பாட்டு!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். மேலும் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
படம் வருகிற பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படமாக அமைந்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகாலங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தன்னுடைய மாஸை காட்ட ஆக்ஷன் படங்களில் நடிக்க களமிறங்கினார். அதற்கு அடித்தளமாக அமைந்த படம் தீனா வை குறிப்பிடலாம்.
இதையும் படிங்க : களத்தூர் கண்ணம்மாவில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர் தானாம்… அவர் வாய்ப்பை தான் கமல் தட்டிபறித்தாராம்…
மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த வீரம், விவேகம், போன்ற படங்களும் முழு ஆக்ஷன் படமாகவே அமைந்தன. இதில் வீரம் படத்தில் அவரின் மாஸ் பார்ப்பவர்களை பூரிப்படைய செய்தன. அதிலும் குறிப்பாக ரத கஜ துராதைகள் பாடலுக்கு அமைந்த ஸ்டண்ட் சீன்கள் ரசிகர்களை புல்லரிக்க செய்தன. அந்த பாடல் அமைந்த விதத்தை பாடலாசிரியர் விவேகா விவரித்தார்.
அந்த பாடல் ரிக்கார்டிங் சமயத்தில் அஜித் அங்கு வந்திருந்தாராம். அந்த பாடலை கேட்டு மிகவும் பாராட்டினாராம். ‘எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் என் குடும்பத்தார் அனைவரும் இந்த பாடலை ரிங் டோனாக வைத்து விட்டனர்’ என்றும் தன் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார் அஜித்.