முதல் நாளே ஃபைட் சீன் வைத்த இயக்குனர்… அஜித்தை இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் படுக்க வைத்த பகீர் சம்பவம்…
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழும் அஜித் குமார், கார் விபத்தில் சிக்கியதால் தனது முதுகில் பல அறுவை சிகிச்சைகள் செய்தவர் என்பதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் சண்டைக் காட்சியில் அஜித் நடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பகீர் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
“ஒரு கல்லூரியின் கதை”, “மாத்தி யோசி”, “ஆனந்தம் விளையாடும் வீடு” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தை வைத்து “மகான்” என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தொடங்கினார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஒரு சண்டை காட்சியை படமாக்க முடிவெடுத்தார் இயக்குனர். அதன் படி அஜித், மாடியில் இருந்து கீழே குதிப்பது போன்ற ஒரு காட்சியை படமாக்க தயாரானார்கள்.
இதில் டூப் ஆக யாரையும் பயன்படுத்தாமல் அஜித்தே குதிப்பதென்று முடிவானது. அவரது பாதுகாப்புக்காக கீழே தரையில் காற்றால் நிரப்பப்பட்ட படுக்கை ஒன்று போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அக்காட்சி படமாக்கத் தொடங்கியவுடன் அஜித் மாடியில் இருந்து கீழே குதித்தார். ஆனால் அவசரத்தில் படுக்கை போடப்பட்டிருந்த இடத்தையும் தாண்டி குதித்துவிட்டார் அஜித். தரையில் விழுந்ததில் அஜித்தின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்த அஜித் குமாரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு பாதை அமைத்துக்கொடுத்த சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்… இப்படியெல்லாம் நடந்திருக்கா!!
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அஜித் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்களாம். ஆதலால் அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம்.