மீண்டும் அந்த இயக்குனரா?.. அஜித் ஃபேன்ஸ் அப்செட் ஆக போறாங்க!...

by Akhilan |   ( Updated:2024-09-01 00:50:20  )
மீண்டும் அந்த இயக்குனரா?.. அஜித் ஃபேன்ஸ் அப்செட் ஆக போறாங்க!...
X

#image_title

Ajithkumar: நடிகர் அஜித்தின் நடிப்பில் அடுத்த படத்தின் அறிவிப்பு ஒன்று இணையத்தில் கசிந்து இருக்கிறது. ஆனால் இதற்கு அஜித் ரசிகர்களே கவலையில் இருப்பது தான் ஆச்சரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அஜித் தற்போது தன்னுடைய விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கிறார். இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!

இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அஜித்தின் 64வது படத்தில் இயக்குனர் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து இருக்கிறது.

அந்த வகையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நான்காவது முறையாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கீரின் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. கதை விவாதம் முடிந்த நிலையில் தற்போது அஜித்தின் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!

கங்குவாவை முடித்துவிட்டு சிறுத்தை சிவாவும் தயாராக இருப்பதால் விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவன திரைப்படங்கள் முறையான ரிலீஸ் அப்டேட் இருக்காது.

siruthai siva ajithkumar

தொடர்ந்து ரிலீசும் தள்ளி போகும் என்பதால், அஜித் ரசிகர்களே இந்த கூட்டணி எங்களுக்கு வேண்டாம் எனவும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன், வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து சிவாவுடன் அஜித் பணி புரிந்திருக்கிறார். இதனால் இந்த படமும் இன்னொரு வி திரைப்படமாக தான் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story