தனது பிடிவாதத்தால் இயக்குனரை பாடாய்படுத்தும் அஜித்!.. செட்டாகுமா ஏகே- 62?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் அஜித் அடுத்ததாக தான் நடிக்கப் போகும் திரைப்படமான ஏகே - 62 படத்தின் பேச்சுவார்த்தையிலேயே இருந்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி கொண்டு வருகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படம் வெளியான வேகத்தில் விக்னேஷ் சிவனுடம் கை கோர்ப்பதாக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க படம் டிராப் ஆனது. இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவியது. மேலும் படத்திற்கான கதையில் விக்னேஷ் சிவன் கொஞ்சம் மெத்தனம் காட்டியிருந்ததால் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியானது.
அதே நேரத்தில் நயனும் அவர் தகுதிக்கு எவ்ளவோ போராடியும் ஏகே-62 படத்தை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அஜித்தின் அடுத்தப் படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. விஷ்னு வர்தன், வெங்கட் பிரபு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டிக் கொண்டே இருக்க,
திடீரென மகிழ் திருமேனி என்ற பெயர் சுற்றிக் கொண்டே வந்தது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் ஓரளவு மகிழ் திருமேனி தான் ஏகே 62 படத்தை இயக்கப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. மேலும் அவரும் ஒன்லைன் கதையை கூற அவருக்கு 10 நாள் கெடு விதித்திருந்தது லைக்கா நிறுவனம்.
10 நாள்களுக்குள் முழு கதையை ரெடி பண்ணி கொண்டு வருமாறு கூறியது. இந்த நிலையில் அஜித் இந்தப் படத்தை இந்த நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம். ஏற்கெனவே மகிழ் திருமேனி இயக்குனர் சங்கரை போல. சங்கரிடம் இந்த மாதிரி எல்லாம் கூற முடியாது. அவர் முடிக்கும் நேரத்தில் தான் முடிப்பார்.
அதே முறையை பின்பற்றுபவர் தான் மகிழ் திருமேனி. ஆனால் அஜித் எப்படியாவது இந்த தேதியில் படத்தை முடிக்க வேண்டும் என்று கட்டளைப் போட்டுக் கொண்டிருக்கிறாராம். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது என்று இதை கேட்ட ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த சுவாரஸ்ய தகவலை வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க : எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர்!.. தொடர்ந்திருந்தால் என்னவாயிருக்கும்?.. கப்சிப்பான திரையுலகம்!..