ஒரு கோடி சம்பளம் கேட்ட முருகதாஸ்.. செம நக்கலடித்த அஜித்.. ஆனாலும் லொள்ளு அதிகம்!...
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்த இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். அஜித்தை வைத்து இவர் இயக்கிய தீனா திரைப்படம்தான் இவரின் முதல் திரைப்படம். முதல் படமே ஹிட் என்பதால் அஜித்தின் குட்புக்கில் இடம் பெற்றார். ஆனால், அப்படத்திற்கு பின் இப்போதுவரை அஜித்தோடு முருகதாஸ் இணையவில்லை.
அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், விஜயகாந்த், சூர்யா, விஜய் என பயணித்தார் முருகதாஸ். இவரின் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாகும். அதேபோல், கத்தி திரைப்படமும் பெரிய வெற்றி பெற்றது. இதனால் தெலுங்கு சினிமாவிலிருந்தும் முருகதாஸுக்கு வாய்ப்புகள் வந்தது. சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின், மகேஷ்பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ ஆகிய படங்களை இயக்கினார்.
ஆனால், அந்த படங்கள் வெற்றியை பெறவில்லை. ரஜினியை வைத்து அவர் இயக்கிய தர்பார் திரைப்படமும் தோல்விப்படமாகவே அமைந்தது. அதன்பின் விஜயை வைத்து ஒரு புதிய படம் உருவாக இருந்தது. ஆனால், அவரின் கதை விஜய்க்கு திருப்தி இல்லை என்பதால் அப்படத்தில் விஜய் நடிக்கவில்லை. முருகதாஸ் இயக்கத்தில் படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எந்த புதிய அறிவிப்பும் வெளிவரவில்லை.
முருகதாஸ் செல்லும் இடமெங்கும் அவரை துரத்தும் கேள்வி ‘அஜித்துடன் மீண்டும் எப்போது இணைவீர்கள்?’ என்பதுதான். அதற்கு மழுப்பலான பதிலையே முருகதாஸ் கூறுவார். ஆனால், விபரம் அறிந்தவர்கள் முருகதாஸ் மீது கோபத்தில் இருக்கும் அஜித் மீண்டும் அவர் கதையில் நடிக்கமாட்டார் என்றுதான் சொல்கிறார்கள். கஜினி படத்தின் கதையை முருகதாஸ் முதலில் கூறியது அஜித்திடம்தான். ஆனால், சூர்யாவை வைத்து எடுத்தார் முருகதாஸ். அதேபோல், கதை திருட்டில் முருகதாஸ் சிக்கியது, விஜயுடன் தொடர்ந்து பயணித்தது என அஜித்துக்கு பல கோபங்கள் முருகதாஸ் மேலே இருக்கிறது.
ஆனால், இதையும் தாண்டி ஒருமுறை அவரின் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டார். ஆனால், தனக்கு சம்பளமாக ஒரு கோடி கேட்டார் முருகதாஸ். இந்த தகவலை அஜித்திடம் சொல்லப்பட்டது. அதற்கு ‘முருகதாஸை நிற்க வைத்து அவரின் அருகில் ஒரு கோடியை நிரப்பு வையுங்கள். எது உயரம் என பார்ப்போம்’ என நக்கலடித்தாராம் அஜித்.
இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித் தவறவிட்ட வேற லெவல் மெகா ஹிட் திரைப்படங்கள்… ஜஸ்ட் மிஸ்…