ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை பங்கமாய் கலாய்த்த அஜித்!. செம நக்கல் பிடிச்சவரு போல!…

Published on: April 12, 2024
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் அஜித். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்தவர். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அஜித் வீட்டின் அருகே இருந்த சில பைக் பட்டறைகளில் அதிக நேரம் செலவழித்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் ‘நீ அழகாக இருக்கிறாய். சினிமாவில் நடிக்கலாம்’ என அவரின் நண்பர்கள் சொல்ல அஜித்துக்கும் அந்த ஆசை வந்திருக்கிறது. பல முயற்சிகள் செய்தார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உதவியால் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பிரேம புஸ்தகம் என்கிற அந்த படம் ஓடவில்லை.

இதையும் படிங்க: விஜய் மகனுக்கும் அஜித்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை! ஷாக் கொடுத்த ஷாலினி அஜித்

அதன்பின் தமிழில் அமராவதி என்கிற படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் பாடல்கள் இப்போதும் பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது. இந்த படத்திற்கு பின் தொடர்ந்து சாக்லேட் பாய் தோற்றத்தில் பல படங்களிலும் நடித்தார். பல தோல்வி படங்களையும் கொடுத்தார்.

அதன்பின் பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் இவருக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கியது. மாஸ் ஹீரோவாக மாறினார் அஜித். கடந்த பல வருடங்களாகவே விஜய்க்கு சரியான போட்டி நடிகராக அஜித் இருக்கிறார். விஜய் படமான வாரிசு படத்தோடு, தனது துணிவு படத்தை மோதவிட்டு ஜெயித்து காட்டினார் அஜித்.

இதையும் படிங்க: ரஜினி சொன்ன டைட்டில்! கமல் ஆஃபிஸில் எடிட்டிங்.. சூப்பர் ஹிட்டான அஜித்தின் அந்தப் படம்

இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல தடைகளுக்கு நடுவில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். ஒருபக்கம், அவ்வப்போது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வதையும் அஜித் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி ஒரு ரசிகர் அஜித்திடம் ஆட்டோகிராப் வாங்கினார். அப்போது ‘கரெக்டா முட்டாள் தினத்தில் என்கிட்ட ஆட்டோகிராப் வாங்குறீங்க’ என சொல்லி சிரித்தார் அஜித். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.