லேட்டா வந்த மேக்கப் மேனுக்கு punishment கொடுத்த தல! வெளியான அஜித்தின் உண்மை முகம்
தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் தங்களுடைய உண்மையான முகத்தை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். படத்தில் ஹீரோவாகவும் நிஜத்தில் வில்லனாகவும் சில நடிகர்கள், படத்தில் வில்லனாகவும் நிஜத்தில் ஹீரோவாகவும் சில நடிகர்கள் என தங்களுடைய உண்மையான கதாபாத்திரத்தை ஒளித்துக் கொண்டு படத்திற்காக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அஜித் பல பேருக்கு செய்த உதவிகள் அவருடைய உதவியால் பலனடைந்தவர்கள் மட்டுமே வெளியில் சொல்லும் போது தெரிகின்றது. மற்றபடி இதுவரை அஜித் எந்த ஒரு பப்ளிசிட்டியும் செய்ததில்லை. வீடு கட்டிக் கொடுத்தார், கார் வாங்கி கொடுத்தார், பைக் வாங்கி கொடுத்தார், நிலம் வாங்கி கொடுத்தார், மருத்துவ செலவுகளுக்கு உண்டான செலவுகளை செய்து கொடுத்தார் என ஏராளமானோர் அஜித்தை பற்றி பெருமையாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் மதுரை மோகன் அஜித்தை பற்றி அவருக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அஜித்துடன் ஒரு சில படங்களில் சேர்ந்து நடித்த மதுரை மோகன் சிட்டிசன் படத்தில் ஒரு போலீசாக நடித்திருப்பார். அதனால் ஏற்பட்ட அனுபவங்களை குறித்து ஒரு பேட்டியில் மெய்மறந்து கூறி இருக்கிறார் மதுரை மோகன்.
அஜித்தின் ஒரு படப்பிடிப்பில் இருக்கும் போது மற்ற நடிகர்களுக்கான மேக்கப் உதவியாளர்கள் வந்து விட்டார்களாம். அஜித்திற்கு உரிய மேக்கப் மேன் வர தாமதமாகிவிட்டதாம். அதனால் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாக அந்த மேக்கப் மேன் வியர்த்து விறுவிறுத்து ஓடி வந்தாராம்.
அப்போது அஜித் அந்த உதவியாளரிடம் ஏன் லேட் என கேட்டாராம். அதற்கு அந்த உதவியாளர் இரண்டு பஸ்கள் மாறி மாறி வந்தேன். அதனால் தான் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது என்று கூறினாராம். உடனே அஜித் என்னது பஸ்-லையா உன்கிட்ட பைக் இல்லையா என கேட்டாராம்.
அவர் இல்லை என்று சொன்னதும் சில மணி நேரம் கழித்து அந்த உதவியாளரிடம் ஒரு புது ஹீரோ ஹோண்டா பைக் சாவியை கொடுத்து இனிமேல் நீ இந்த பைக்கில் தான் வர வேண்டும் என சொல்லி அந்த சாவியை கொடுத்தாராம். அதை வாங்கிக் கொண்டதும் அந்த உதவியாளர் நன்றி என சொல்லிவிட்டு மறுபடியும் அந்த சாவியை அஜித்திடம் கொடுத்தாராம்.
இதையும் படிங்க : சிவாஜியின் நடிப்பை பார்த்து கடுப்பான இயக்குனர்! ‘தேவர்மகன்’ படத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்கா?
உடனே அஜித் ஏன் வேண்டாமா என கேட்டாராம்.அதற்கு அந்த உதவியாளர் இல்லை இல்லை என்று சொல்லிவிட்டு காலில் விழுந்து அந்த சாவியை வாங்கினாராம். அதை பார்த்ததும் அஜித் அந்த உதவியாளரின் முதுகை அடித்து இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.